மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 24 ஜன 2021

சசிகலா எப்படி இருக்கிறார்?

சசிகலா எப்படி இருக்கிறார்?

சசிகலாவின் உடல்நிலை சீராக இருப்பதாக அவர் சிகிச்சை பெறும் மருத்துவமனை தரப்பில் இன்று (ஜனவரி 24) தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில், சிறைத் தண்டனை பெற்று வரும் சசிகலா ஜனவரி 27ஆம் தேதி வெளியே வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 21ஆம் தேதி கலாசிபாளையாவில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆர்டிபிசிஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவருக்கு நுரையீரல் பாதிப்பு அதிகமானதையடுத்து நிமோனியா பாதிப்பும் உண்டானது. இதையடுத்து அவரை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றி, மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் சசிகலாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக விக்டோரியா மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், சசிகலாவின் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது. கொரோனா அறிகுறிகள் குறைந்துள்ளன. நாடித் துடிப்பு, ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆக்ஸிஜன் அளவு சசிகலாவுக்கு 97% இருக்கிறது. நிமிடத்திற்கு 4 லிட்டர் அளவு ஆக்ஸிஜன் அவருக்குக் கொடுக்கப்பட்டு வருகிறது. சர்க்கரை அளவு அதிகமாக உள்ளதால் இன்சுலின் வழங்கப்பட்டு வருகிறது. அவர் உணவை இயல்பாக எடுத்துக் கொள்கிறார். உதவியாளர்களின் உதவியுடன் எழுந்து நடக்கிறார். வழக்கமாக கொரோனாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சையே அளிக்கப்படுகிறது. சிகிச்சைக்கு ஒத்துழைக்கிறார். தொடர்ந்து தீவிர மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து 5ஆவது நாளாக அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

5 நிமிட வாசிப்பு

பலன் தராத வீரமணியின் தூது-அதிரடி ரெய்டு பின்னணி!

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன? பாமக மறுப்பது ஏன்?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-திமுக: டாக்டர் பேசியது என்ன?  பாமக மறுப்பது ஏன்?

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

6 நிமிட வாசிப்பு

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி. யார்?

ஞாயிறு 24 ஜன 2021