மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 24 ஜன 2021

டெல்லி பயணம்: ஓபிஎஸ் நகர்த்தும் புதிய காய்!

டெல்லி பயணம்: ஓபிஎஸ் நகர்த்தும் புதிய காய்!

தமிழக முதல்வரும் அதிமுக வின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கடந்த ஜனவரி 18, 19 தேதிகளில் டெல்லி சென்று வந்தார்.

அப்போது அவர் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரதமர் மோடி ஆகியோரை சந்தித்து தமிழக அரசின் முக்கியமான நிதி தேவைகள் பற்றிய கோரிக்கைகளை அவர்களிடம் முன் வைத்தார்.

இந்த சந்திப்புகளின் போது அரசியல் பேசவில்லை என்று டெல்லியில் செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். ஆனாலும் இந்தப் பயணத்தின்போது அதிமுக கூட்டணி, சசிகலா விடுதலை தொடர்பாக அமித்ஷா, மோடி இருவருடனும் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தியதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் கருதுகிறார்.

"அண்மையில் அமித்ஷா சென்னை வந்தபோது அவரது முன்பாகவே அதிமுக பாஜக கூட்டணி தொடரும் என்று அறிவித்தவர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம். மேலும் தற்போதைய நிதி அமைச்சரும் பன்னீர்செல்வம் தான்.

இப்படி அரசு ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் முக்கியமான பதவியில் இருக்கும் பன்னீர்செல்வத்தை தவிர்த்துவிட்டு டெல்லியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனியாக ஆலோசனை நடத்தியிருக்கிறார் என்ற வருத்தம் பன்னீருக்கு இருக்கிறது.

அதனால்தான் முதல்வர் டெல்லி விசிட் என்றதும் பரபரப்பாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் காணொலி முறையில் ஆலோசனை நடத்தி தமிழகத்திற்கான நிதி தேவைகளை கோரிக்கையாக வைத்தார் பன்னீர்செல்வம்.

அதிமுகவின். அரசியல் முடிவுகளுக்கு இரண்டு பேரும் பொறுப்பு என்று முடிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில்... எடப்பாடி பழனிசாமி மட்டும் டெல்லி சென்று ஆலோசனை நடத்தி வருவது பன்னீருக்குப் பிடிக்கவில்லை.

இந்நிலையில் தானும் ஒருமுறை டெல்லி பயணம் மேற்கொண்டு திரும்புவது என்ற முயற்சியில் இருக்கிறார் ஓபிஎஸ். இதை அறிந்த எடப்பாடி பழனிசாமி... அப்படி மீண்டும் ஒரு டெல்லி பயணம் அமைந்தால் தங்கள் இருவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று டெல்லியிடம் அழுத்தம் கொடுத்து வருகிறார்.

வேந்தன்

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

ஞாயிறு 24 ஜன 2021