மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 20 ஜன 2021

சசிகலாவின் இசிஜி ரிசல்ட்?

சசிகலாவின் இசிஜி ரிசல்ட்?

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்துவரும் சசிகலாவுக்கு இன்று (ஜனவரி 20) மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்து அவரை, இன்று மாலை 4. 15 மணிக்கு அருகே இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

இன்று காலை தனது கடமைகளை முடித்துவிட்டு தன் அறையில் அமர்ந்திருந்த சசிகலாவுக்கு லேசாக மூச்சுத் திணறல் ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக இதுகுறித்து சிறை காவலர்கள் மூலம் சிறை அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

சிறை அதிகாரிகள் மருத்துவர்களுக்கு தகவல் அனுப்ப கொஞ்ச நேரத்தில் மருத்துவர்கள் வந்துள்ளனர். கடந்த ஐந்தாறு நாட்களாகவே காய்ச்சலைப் போன்ற உணர்வு இருப்பதாகவும், இன்று மூச்சுவிட சிரமமாக இருப்பதாகவும் கூறியுள்ளார் சசிகலா. சர்க்கரை அளவும் சற்று அதிகமாக இருந்திருக்கிறது. சசிகலாவுக்கு ரத்த அழுத்தமும் பரிசோதிக்கப்பட்டது.

அவருக்குத் தேவையான முதல் சிகிச்சைகளை அங்கேயே அளித்த மருத்துவர்கள் இன்று மாலை 4.15 மணிக்கு சசிகலாவை சிறைக்கு அருகே உள்ள Bowring and Lady Curzon Hospital மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கே மருத்துவமனையில் சசிகலாவுக்கு இசிஜி டெஸ்ட் எடுக்கப்பட்டிருக்கிறது. ECG (electrocardiogram) டெஸ்ட் என்பது இதயத்தின் நிலையைப் பற்றி அறிவதற்காக எடுக்கப்படும் டெஸ்ட். அதிக ரத்த அழுத்தத்தால் இதயம் விரிவடைகிறதா என்றும், ஏற்கனவே மெல்லிய மாரடைப்புகள் வந்துள்ளதா என்றும் இந்த இசிஜி டெஸ்ட் மூலம் தெரிந்துகொள்ளலாம். சிம்பிள் டெஸ்ட் என்று மருத்துவ வட்டாரத்தில் அழைக்கப்படும் இந்த டெஸ்ட், இன்று மாலை சசிகலாவுக்கு மேற்கொள்ளப்பட்டது. அதில் நார்மல் என்று ரிசல்ட் வந்திருக்கிறது.

மேலும் அடுத்தடுத்து சசிகலாவுக்கு இன்னும் சில மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. அதன் முடிவைப் பொறுத்தே அவர் மருத்துவமனையில் இருக்க வேண்டுமா, மீண்டும் சிறைக்குள் அழைத்துச் செல்லப்படுவாரா என்று தெரியவரும்.

-வேந்தன்

கிஷ்கிந்தாவின் 177 ஏக்கர் கோயில் நிலம்: சேகர்பாபு

4 நிமிட வாசிப்பு

கிஷ்கிந்தாவின் 177 ஏக்கர்  கோயில் நிலம்: சேகர்பாபு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதிமன்றம் கண்டனம்!

4 நிமிட வாசிப்பு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதிமன்றம் கண்டனம்!

உள்ளாட்சித் தேர்தல்: மேல்மருவத்தூரில் ஆன்மீக அரசியல்-பின்னணி! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: மேல்மருவத்தூரில் ஆன்மீக அரசியல்-பின்னணி!

புதன் 20 ஜன 2021