மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 20 ஜன 2021

ஆக்சிஜன் லெவல் குறைவு: மருத்துவமனையில் சசிகலா

ஆக்சிஜன் லெவல் குறைவு: மருத்துவமனையில் சசிகலா

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலா இன்று ( ஜனவரி 20) பகல் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வரும் ஜனவரி 27ஆம் தேதி சசிகலா விடுதலை செய்யப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில்,. சில நாட்களுக்கு முன்பே அவரிடம் நிர்வாக அலுவல் ரீதியான கையொப்பங்கள் பெறப்பட்டு விட்டன.

இந்த நிலையில் சசிகலாவை வரவேற்பதற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் தீவிர ஏற்பாடுகள் செய்து வரும் நிலையில்.., இன்று சசிகலாவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது.

சசிகலாவுக்கு ஏற்கனவே சர்க்கரை நோய், ரத்த அழுத்தப் பிரச்சனை இருக்கும் நிலையில் இன்று காலை சிறையில் தனது கடமைகளை முடித்துவிட்டு அமர்ந்திருக்கும் போது லேசான மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கிறது. உடனே அவருக்கு சிறையில் மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை செய்திருக்கிறார்கள்.

இதுபற்றி சசிகலா தரப்பில் நாம் விசாரித்தபோது, “சசிகலாவுக்கு ஒரு வாரமாக ஃபீவரிஷாக இருந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டிருக்கிறது. ஆக்சிஜன் லெவல் குறைந்திருப்பதால் மருத்துவர்கள் சசிகலாவை வெளியே கூட்டிச் சென்று சிகிச்சை அளிக்கலாம் என்று கூறியதையடுத்து அவரை இன்று பிற்பகல் சிவாஜிநகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.ஒரு வேளை கொரோனாவாக இருக்கலாமா என்று சோதனை செய்தால்தான் தெரியவரும்” என்கிறார்கள்.

விஜிலென்ஸ் வருகை: இரவில் சென்று பகலில் வந்த எடப்பாடியின் நண்பர் ...

6 நிமிட வாசிப்பு

விஜிலென்ஸ் வருகை:  இரவில்  சென்று   பகலில் வந்த எடப்பாடியின் நண்பர் இளங்கோவன்

துரைமுருகன் ஆதரவாளர்களை துரைமுருகன் மூலமாகவே நீக்கிய ஸ்டாலின் ...

10 நிமிட வாசிப்பு

துரைமுருகன் ஆதரவாளர்களை  துரைமுருகன் மூலமாகவே நீக்கிய ஸ்டாலின்

ரெய்டு: இளங்கோவனைப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர்!

9 நிமிட வாசிப்பு

ரெய்டு: இளங்கோவனைப் போட்டுக் கொடுத்த அதிமுகவினர்!

புதன் 20 ஜன 2021