மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 20 ஜன 2021

ஜெயலலிதா மணி மண்டபம் - ஜனவரி 27ஐ எடப்பாடி தேர்ந்தெடுத்தது ஏன்?

ஜெயலலிதா மணி மண்டபம் - ஜனவரி 27ஐ எடப்பாடி தேர்ந்தெடுத்தது ஏன்?

முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா நினைவிடத்தில் கட்டப்பட்டுள்ள மணி மண்டபத்தை ஜனவரி 27ஆம் தேதி, திறப்பு விழா செய்ய முதல்வர் திட்டமிட்டிருக்கிறார். சில நாட்களுக்கு முன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மெரினா சென்று மணி மண்டபப் பணிகளைப் பார்வையிட்டார்.

அவர் டெல்லி சென்றபோது பிரதமர் மோடியிடம் ஜெவின் நினைவு மணி மண்டபத்தை திறந்து வைக்கவும் மோடியிடம் கோரிக்கை வைத்திருக்கிறார் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில்தான் மெரினா கடற்கரையில் 50,422 சதுர அடியில், 50.80 கோடி ரூபாய் மதிப்பில் பீனிக்ஸ் பறவை வடிவத்தில் கட்டப்பட்டுள்ள மணி மண்டபத்தை வரும் ஜனவரி 27ஆம் தேதி, திறக்க திட்டமிட்டுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

“ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தால் நான்கு ஆண்டு சிறைத் தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டவர் என்பதால், அவரது மணி மண்டபம் திறப்பு விழா நிகழ்ச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்களை அழைத்தபோது தவிர்த்துவிட்டார்கள்” என்று சொல்கிறார்கள் டெல்லி வட்டாரத்தில்.

இந்த நிலையில்தான் டெல்லி பயணம் முடிந்ததுமே ஜெயலலிதா மண்டபத்தை ஓபிஎஸ் - ஈபிஎஸ் 27ஆம் தேதி திறந்து வைக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

இந்தத் தேதி முடிவு செய்யப்பட காரணம் என்ன?

“சசிகலா விடுதலை நாள் ஜனவரி 27ஆம் தேதி என்று இரண்டு நாட்களுக்கு முன்பு உறுதி செய்துவிட்டது பரப்பன அக்ரஹார சிறை நிர்வாகம். சசிகலா விடுதலையானால் அவரை வரவேற்க அமமுகவினருடன் அதிமுகவினரும் போய்விடக் கூடாது, மேலும், அன்று அனைத்து செய்தி தாள்களிலும் தொலைக்காட்சிகளிலும் சசிகலா செய்திதான் முக்கிய செய்தியாக இடம்பெறும். இதையெல்லாம் தவிர்க்கத்தான் சசிகலா விடுதலை நாளில் ஜெயலலிதாவின் மணி மண்டபம் திறப்பு விழா நிகழ்ச்சியை வைத்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி” என்கிறார்கள் அதிமுக பிரமுகர்கள்.

-வணங்காமுடி

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே!

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

16 நிமிட வாசிப்பு

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்!

புதன் 20 ஜன 2021