மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 18 ஜன 2021

நந்திகிராம் தொகுதியில் போட்டி - அடித்து ஆடும் மம்தா

நந்திகிராம் தொகுதியில் போட்டி - அடித்து ஆடும் மம்தா

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வரும் சட்டமன்றத் தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிடப் போவதாக இன்று (ஜனவரி 18) அறிவித்தார். இதில் முக்கியத்துவம் என்னவென்றால், அதில் ஒரு தொகுதி நந்திகிராம் தொகுதி என்று அவர் அறிவித்துள்ளார்.

சிபிஎம் கோட்டையாக இருந்த நந்திகிராம் மாவட்டத்தில் அதை உடைத்து திருணமூல் காங்கிரஸ் கட்சியை வெற்றிபெற வைத்ததில் முக்கிய பங்கு சுவேந்து அதிகாரிக்கு உண்டு. திருணமூல் காங்கிரசின் முக்கிய தலைவராகவும், அமைச்சராகவும் இருந்த அதிகாரி அண்மையில் பாஜகவுக்குத் தாவினார்.

இந்நிலையில்தான் இன்று (ஜனவரி 18) நந்திகிராம் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசினார் மம்தா பானர்ஜி. கட்சியை விட்டுப் போன அதிகாரியின் சொந்த ஊரில் மம்தா என்ன பேசுவார் என்று அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில் இக்கூட்டத்தில் பேசிய மம்தா,

“என் ஆத்மா என்னிடம், நந்திகிராம் உனக்கு அதிர்ஷ்டமான இடம், உனக்கு புனிதமான இடம், எனவே, நீ நந்திகிராமில் போட்டியிட வேண்டும் என்று என்னிடம் சொல்கிறது” என்றதும் கூட்டம் ஆர்ப்பரித்தது. தொடர்ந்து பேசிய மம்தா,

“ஆம்...நான் வரும் சட்டமன்றத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் இருந்து போட்டியிட விரும்புகிறேன். நந்திகிராம் எனது அக்கா. பவானிபூர் (கொல்கத்தா நகரத்தில் இருக்கும் மம்தாவின் தற்போதைய தொகுதி) எனது தங்கை. நந்திகிராம், பவானிபூர் ஆகிய இரு தொகுதிகளில் இருந்தும் நான் போட்டியிடலாம். நந்திகிராமில் இருந்து எனது வேட்புமனுவை பரிசீலிக்க வேண்டும் என்று எங்கள் கட்சித் தலைமையைக் கேட்டுக் கொள்கிறேன்” என்று பேசினார்.

திருணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்த அதிகாரி இத்தொகுதியின் எம்.எல்.ஏ.வாகவும், மாநில அமைச்சராகவும் தொடர்ந்து இருந்தவர். அம்மாவட்டத்திலே அவரது குடும்ப செல்வாக்கு அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் அதிகாரியின் தொகுதியில் தானே போட்டியிட மம்தா பானர்ஜி முடிவு செய்து அறிவித்திருப்பதால்... திருணமூல் காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் எழுச்சி அடைந்துள்ளனர்.

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

திங்கள் 18 ஜன 2021