மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 18 ஜன 2021

புதுச்சேரி திமுக பேரணி: காங்கிரஸ் அரசின் கெடுபிடி!

புதுச்சேரி திமுக பேரணி: காங்கிரஸ் அரசின் கெடுபிடி!

திமுக-காங்கிரஸ் கூட்டணியில் பெரிய அளவு சலசலப்பை ஏற்படுத்தும் வகையில் இன்று ஜனவரி 18 காலை 11 மணிக்கு புதுச்சேரியில் மாநில திமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற இருக்கிறது.

இந்த கூட்டத்திற்கு திமுகவின் அரக்கோணம் எம்பி ஜெகத்ரட்சகன் தலைமை ஏற்று நடத்துகிறார். 'மண்ணின் மைந்தரே வருக மக்கள் ஆட்சி தருக' என்று புதுச்சேரி முழுவதும் திமுகவினரின் போஸ்டர்களும் சுவர் விளம்பரங்களும் அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளன.

புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணியை விட்டு விலகி திமுக போட்டியிடுவது என்றும் அதன் முதல்வர் வேட்பாளராக ஜெகத்ரட்சகனை முன்னிறுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் ஒரு முன்னெடுப்பாக தான் இன்று நடக்கும் புதுச்சேரி திமுக மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் ஜெகத்ரட்சகன் கலந்து கொள்கிறார்.

நிர்வாகிகள் கூட்டத்துக்கு செல்லும் முன்பு தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து விட்டு பெரும் பேரணியாக மண்டபத்துக்கு செல்வது என்பதுதான் ஜெகத்ரட்சகனின் திட்டம்.

இதற்காக ஆயிரக்கணக்கான மோட்டார் சைக்கிள்களும் நூற்றுக்கணக்கான கார்களும் தயார் செய்யப்பட்டுள்ளன.

புதுச்சேரியில் இருக்கும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியில் இருந்தும் 100 முதல் 150 மோட்டார் சைக்கிள்கள் பேரணியில் அணிவகுத்து செல்வது என்று முடிவு செய்யப்பட்டு அதற்கான செயல் திட்டங்களும் வகுக்கப்பட்டு விட்டன.

இந்த நிலையில் திமுக பேரணிக்கு காங்கிரஸ் கட்சியின் முதல் ரியாக்ஷன் ஆக காங்கிரஸ் அரசிடம் இருந்து தடைகளும் கெடுபிடிகளும் வர ஆரம்பித்துள்ளன.

நம்மிடம் பேசிய புதுவை திமுக பொறுப்பாளர் சிவா எம்எல்ஏ,

"புதுச்சேரி திமுகவின் மாநில நிர்வாகிகள் கூட்டத்துக்காக பேரணியாக செல்வது என்று திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்து வரும் நிலையில்... புதுச்சேரி காவல் துறையினர் மோட்டார் சைக்கிள் பேரணிக்கு தடை போடும் வகையில் நடந்து கொள்கிறார்கள்.

ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் புதுச்சேரி நகரத்துக்கு திமுகவினர் மோட்டார் சைக்கிளில் வருவதை போலீஸ் தடுப்பதாக தகவல் கிடைத்துள்ளது ‌.

மேலும் இந்தப் பேரணிக்கு ஊரடங்கு விதிமுறைகளை காரணம் காட்டி தடை போடவும் முயற்சிகள் நடக்கின்றன. புதுச்சேரி காங்கிரஸ் அரசு திமுகவின் கூட்டத்திற்கு அரசு எந்திரத்தை பயன்படுத்தி தொல்லை தருகிறது. இதை எல்லாம் கடந்து பேரணிகளையும் நிர்வாகிகள் கூட்டத்தையும் வெற்றிகரமாக நடத்துவோம்" என்று நம்மிடம் கூறினார்.

வணங்காமுடி

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்  ...

5 நிமிட வாசிப்பு

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்   

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்: அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா? ...

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்:  அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா?

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி! ...

2 நிமிட வாசிப்பு

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி!

திங்கள் 18 ஜன 2021