மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 17 ஜன 2021

சி.பி.ஐ.யின் பிடியில் அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர்?

சி.பி.ஐ.யின்  பிடியில் அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர்?

பொள்ளாச்சி பாலியல் வழக்கைப் போலவே, சுமார் 3 ஆண்டுகளாக சி.பி.ஐ.யின் விசாரணையில் இருக்கும் குட்கா வழக்கும் சூடு பிடிக்கும்’ என கூறப்பட்டு வந்த நிலையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணனை சி.பி.ஐ. அதிகாரிகள் மீண்டும் திடீரென விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளதாக தகவல்கள் கசிகின்றன.

கடந்த ஜனவரி 7 ஆம் தேதி மின்னம்பலத்தின் டிஜிட்டல் திண்ணை பகுதியில், பொள்ளாச்சியை அடுத்து விஜயபாஸ்கர்? அதிமுக மீது பாயும் பாஜக! என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

அதில், “பொள்ளாச்சி விவகாரத்தில் சிபிஐ மிக தாமதமாக செயல்பட்டிருந்தாலும் இந்த செயல்பாட்டுக்குப் பின்னால் அரசியல் இருக்கிறது என்று அதிமுக கருதுகிறது. அதிமுக டாப் லெவல் நிர்வாகிகள் சிலரிடம் பேசியபோது, ‘பாஜகவுடன் கூட்டணி விஷயத்திலும் சீட்டுகள் விஷயத்திலும் அதிமுக வேறுமாதிரி நிலைப்பாடுகளை எடுத்து வருவதால்தான் முதல் கட்டமாக பொள்ளாச்சி விவகாரத்தில் சிபிஐ செயல்பட்டிருக்கிறது. அதிமுகவின் இந்தப் போக்கு தொடரும் பட்சத்தில் அடுத்ததாக அமைச்சர்கள் மீது கை வைக்க முடிவு செய்திருக்கிறது பாஜக. முதல்கட்டமாக குட்கா வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கரை விசாரணைக்கு அழைத்து சம்மன் அனுப்ப முடிவு செய்யப்பட்டிருக்கிறதாம். பொங்கலுக்கு முன்போ பின்போ விஜயபாஸ்கருக்கு இந்த விவகாரத்தில் சம்மன் அனுப்பப்படலாம் இதுபற்றி எடப்பாடி இப்போது ஆலோசனை செய்து வருகிறார்’ என்று எழுதியிருந்தோம்.

இந்த நிலையில்தான் விஜயபாஸ்கரின் பி.ஏ. சரவணனை சிபிஐ விசாரணைக்கு அழைத்திருப்பதாக தகவல்கள் வருகின்றன.

தமிழகத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள், 2016 ஆம் ஆண்டு மதுரவாயலில் உள்ள ஒரு குடோனில் டண் கணக்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது கைப்பற்றப்பற்றப்பட்ட குட்கா வியாபாரி மாதவராவின் டைரியின் மூலம் அமைச்சர்கள், உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள், தமிழக காவல்துறை மற்றும் மத்திய கலால்துறை அதிகாரிகள் லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது. ஆரம்பத்தில் லஞ்சஒழிப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்திய நிலையில், திமுக போட்ட ஒரு வழக்கின் மூலம் குட்கா வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியது சென்னை உயர் நீதிமன்றம்.

குட்கா ஆலை உரிமையாளர்களான மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உனவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன், கலால்துறை அதிகாரி பாண்டியன் ஆகியோர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரிடமும் விசாரணை நடந்தது. 2018 டிசம்பர் வாக்கில் அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணன், சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது மற்றொரு பி.ஏ. சீனிவாசன் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இவ்வழக்கில் 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒரு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ‘விரைவில் 2வது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்’ என கடந்த சுமார் 6 மாதங்களாகவே கூறி வந்தது சி.பி.ஐ.

இந்நிலையில்தான், சிவகங்கை மாவட்டம் திருவாடானையில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணனை சி.பி.ஐ. அதிகாரிகள் திடீரென விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி உறுதியாகியுள்ள நிலையில், பிரதமர் மோடி, பா.ஜ.க தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் அமித்ஷா ஆகியோரை சந்திப்பதற்காக தமிழக முதல்வர் நாளை டெல்லி செல்ல உள்ள நிலையில் வெளியாகியிருக்கும் தகவல்கள் ஆளுங்கட்சி வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

-பாரதி

கொடநாடு வழக்கு: சேலத்தில் ஒருவர் கைது!

5 நிமிட வாசிப்பு

கொடநாடு வழக்கு: சேலத்தில் ஒருவர் கைது!

பன்னீர் பின்னால் திமுக: சிவி சண்முகம்

4 நிமிட வாசிப்பு

பன்னீர் பின்னால் திமுக: சிவி சண்முகம்

மகாராஷ்டிரா: ஆளுநருடன் பாஜக பட்னவிஸ் சந்திப்பு- அடுத்த ஆட்சிக்கு ...

3 நிமிட வாசிப்பு

மகாராஷ்டிரா: ஆளுநருடன் பாஜக பட்னவிஸ் சந்திப்பு- அடுத்த ஆட்சிக்கு ஆயத்தம்! 

ஞாயிறு 17 ஜன 2021