மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 16 ஜன 2021

பாஜகவால் கோயிலுக்குள் அனுமதி மறுக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏ.

பாஜகவால்  கோயிலுக்குள் அனுமதி மறுக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏ.

குமரி மாவட்டம் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேர்கிளம்பி பகுதியில் உள்ள பெருஞ்சகோணம் பகுதியில் உள்ள சக்திவினாயகர் கோவிலில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது வாடிக்கை.

இந்த வகையில் ஜனவரி 14 ஆம் தேதி காலையில் நடைபெற்ற பொங்கல் விழாவிற்கு.பத்மநாபபுரம் சட்டமன்ற திமுக உறுப்பினரும், குமரி மேற்கு மாவட்ட தி மு க செயலாளருமான மனோதங்கராஜ் உடன் 50 க்கும் அதிகமானோர் பொங்கல் விழாவிற்கு சென்றனர்.

சக்திவினாயகர் தேவி கோயில் நிர்வாகிகள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பாஜகவினரும்.சட்ட மன்ற உறுப்பினர் மனோதங்கராஜ், அவருடன் வந்தவர்களையும் கோயிலுக்குள் செல்லமுடியாத படி கோயில் வளாகம் வாசலை மூடியதுடன். இந்து கடவுள்களை இழிவுபடுத்தும் கட்சியை சேர்ந்த தி மு க கட்சியினரை கோவிலுக்கு ள் அனுமதிக்க மாட்டோம் என தடுத்து நிறுத்தினார்கள். இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சட்டமன்ற உறுப்பினருடன் வந்த 50 பேர்களுக்கும் கோவில் நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் நடந்த நிலையில், குமரி மாவட்ட பாஜக மாவட்ட தலைவர் தர்மராஜ், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் வழக்கறிஞர் சிவகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்ததும் நிலைமை மேலும் தீவிரமானது. இரண்டு பக்கமும் என்ன பேசுகிறார்கள் என்பதே தெரியாத ஒரு கலவர நிலையில் போலீஸாரும் அங்கே வந்தனர்.

காவல்துறையினர், “கோயில் எல்லோருக்கும் பொதுவானது.எவரையும் வரக்கூடது என தடுக்க முடியாது” எனக் கூற, கோயில் நிர்வாகிகளோ, “ எங்கள் கோவிலில் பிற மதத்தவர்களை அனுமதிக்க மாட்டோம். இந்துக்கள், இந்து மத தெய்வங்களை வழிபடுபவர்கள் மட்டுமே கோயிலின் உள் அனுமதிப்போம்” என்று பிடிவாதமாக இருந்தனர். தொடர்ந்து சுமார் அரைமணி நேரம் பிரச்சினை நீடிக்க, மனோ தங்கராஜ் கோயிலுக்குள் செல்லாமலேயே திரும்பிவிட்டார்.

சம்பவம் பற்றி சட்டமன்ற உறுப்பினர் மனோதங்கராஜிடம் பேசியபோது, “கோவிலில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் நிகழ்ச்சிக்கு அந்த பகுதியில் உள்ளவர்கள் அழைத்துதான் நான் நண்பர்களுடன் சென்றேன். தமிழகத்தில் உள்ள பல் சமய கோவில்களுக்கும்,குமரியில் உள்ள எத்தனையோ இந்து கோவில்களுக்கும் சென்றுள்ளேன். இதை போன்ற வேதனையை இங்கு தான் எதிர் கொண்டேன் காவல்துறை நடுநிலையாக செயல்படாது ஒரு தலைபட்சமாக இருந்தது வேதனை தருகிறது. ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு கோயிலுக்குள் நுழையக் கூட அனுமதி மறுக்கப்பட்டு, ஒரு மக்கள் பிரதிநிதியை அவமானப்படுத்தியதை குறித்து முதல்வரிடம் தெரிவிக்க இருக்கிறேன்.

குமரி மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நேரடியாக விசாரணையை மேற்கொண்டு அந்த கூட்டத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.

தென்னவன்

.

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

சனி 16 ஜன 2021