மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 15 ஜன 2021

பட்ஜெட்டுக்குப் பிறகு தமிழகத் தேர்தல் அறிவிக்கை!

பட்ஜெட்டுக்குப் பிறகு தமிழகத் தேர்தல் அறிவிக்கை!

இந்திய ஒன்றிய அரசின் 2021- 22ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.

மக்களவை செயலகம் சார்பில் நேற்று ஜனவரி 14 வெளியிடப்பட்ட அறிவிப்பில் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கும் தேதி, பட்ஜெட் தேதி ஆகியவை அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, “இந்த நாடாளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடரான பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜனவரி 29ஆம் தேதி தொடங்குகிறது. இந்தத் தொடர் வரும் ஏப்ரல் 8ஆம் தேதி முடிவடைகிறது. குடியரசுத் தலைவர் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனவரி 29ஆம் தேதி காலை 11 மணிக்கு உரையாற்றி பட்ஜெட் கூட்டத் தொடரைத் தொடங்கி வைக்கிறார். அதையடுத்து ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையை பிப்ரவரி 1ஆம் தேதி காலை 11 மணிக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வார்.

பல்வேறு அமைச்சகங்களின் மானியக் கோரிக்கைகள் தொடர்பான அறிக்கைகளை தயார் செய்வதற்காக நாடாளுமன்றம் பிப்ரவரி 15ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டு மீண்டும் மார்ச் 8ஆம் தேதி தொடங்கும்” என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் நடக்கும் காலகட்டம் தமிழகம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் காலகட்டம் என்பதால் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகே தேர்தல் அறிவிக்கை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-வேந்தன்

கொடநாடு வழக்கு: சேலத்தில் ஒருவர் கைது!

5 நிமிட வாசிப்பு

கொடநாடு வழக்கு: சேலத்தில் ஒருவர் கைது!

பன்னீர் பின்னால் திமுக: சிவி சண்முகம்

4 நிமிட வாசிப்பு

பன்னீர் பின்னால் திமுக: சிவி சண்முகம்

மகாராஷ்டிரா: ஆளுநருடன் பாஜக பட்னவிஸ் சந்திப்பு- அடுத்த ஆட்சிக்கு ...

3 நிமிட வாசிப்பு

மகாராஷ்டிரா: ஆளுநருடன் பாஜக பட்னவிஸ் சந்திப்பு- அடுத்த ஆட்சிக்கு ஆயத்தம்! 

வெள்ளி 15 ஜன 2021