மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 13 ஜன 2021

திமுக மாநாடு: கூட்டணிக் கட்சிகளுக்கு அழைப்பில்லை!

திமுக மாநாடு: கூட்டணிக் கட்சிகளுக்கு அழைப்பில்லை!

வர இருக்கும் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி திமுக மிகப்பெரிய அளவில் மாநாடு நடத்தத் திட்டமிட்டிருக்கிறது. இதுகுறித்து கடந்த வாரம் திமுக தேர்தல் உத்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தலைமையில் நடந்த கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து ஏற்கனவே டிஜிட்டல் திண்ணை பகுதியில் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த நிலையில் திமுகவின் தேர்தல் மாநாடு குறித்த அடுத்த கட்ட செய்திகள் திமுக வட்டாரத்தில் இருந்து கிடைத்திருக்கின்றன.

திமுக நடத்தும் இந்தத் தேர்தல் மாநாடு வரும் பிப்ரவரி 21 ஆம் தேதி திருச்சிக்கும் பெரம்பலூருக்கும் இடையே அமைந்திருக்கும் சிறுகனூரில் நடக்க இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் இப்போது தொடங்கியிருக்கின்றன. இந்த மாநாடு வழக்கமான சில அம்சங்களில் இருந்து வேறுபடப் போகிறது என்கிறார்கள். என்ன வேறுபாடு என்று திமுக உயர் மட்டத்தில் விசாரித்தபோது,

“தேர்தலை ஒட்டி திமுக நடத்துவது புதிதல்ல. அந்த அடிப்படையில்தான் இப்போதும் மாநாடு நடத்தப்பட இருக்கிறது. சமீப காலமாக திமுகவின் தேர்தலுக்கு முந்தைய மாநாடுகளில் அதன் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரு சில தேர்தல் மாநாடுகளில் தேர்தல் சீட் பகிர்வு தொடர்பாக ஒரு சில கூட்டணித் தலைவர்கள் வருவார்களா, மாட்டார்களா என்பது கூட அரசியலில் பேசுபொருளாகியிருக்கிறது.

இப்போது திமுக தலைமை எடுத்திருக்கும் முடிவின்படி திருச்சி சிறுகனூரில் நடக்கும் மாநாடு முழுக்க முழுக்க திமுகவின் மாநாடாக மட்டுமே நடக்க இருக்கிறது. கூட்டணிக் கட்சித் தலைவர்கள் யாரையும் அழைக்கும் முடிவு இப்போது வரை இல்லை. திமுகவின் முழுமையான பலத்தைக்காட்டும் வகையில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது” என்கிறார்கள்.

திமுகவின் கூட்டணிக் கட்சிகள் ஏற்கனவே தங்களுக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்பதில் குழப்பத்தில் இருக்கின்றன. சமீப நாட்களாக திமுக தலைவரின் மகனும் இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பேசிவரும் பேச்சுகள் கூட்டணிக் கட்சிகளை சற்றே குறைத்து மதிப்பிடுவதாகவே தோன்றுகின்றன. இந்நிலையில் திமுகவின் மாநாட்டுக்கும் கூட்டணிக் கட்சிகள் அழைக்கப்படவில்லை என்றால் திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்படாதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

புதன் 13 ஜன 2021