மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 12 ஜன 2021

உச்சநீதிமன்றக் குழு வேளாண் சட்டத்துக்கு ஆதரவானது: போராட்டத்தை தொடரும் விவசாயிகள்!

உச்சநீதிமன்றக் குழு வேளாண் சட்டத்துக்கு ஆதரவானது: போராட்டத்தை தொடரும் விவசாயிகள்!

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருப்பது பற்றி போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளும் மற்ற அரசியல் தலைவர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இன்று (ஜனவரி 12) பகல் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான நீதிபதிகள் அமர்வு வேளாண் சட்டங்கள் செயல்பாட்டுக்கு வருவதை நிறுத்தி வைத்ததோடு, விவசாயிகளுக்கும் அரசுக்குமான பிரச்சினையை முடிவுக்குக்கொண்டு வர ஒரு குழுவை அமைத்திருக்கிறது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்றிருக்கும் விவசாயிகள் சங்க கூட்டமைப்பினர், ஆனால் இதற்காக போராட்டத்தை நிறுத்திக் கொள்ள முடியாது என்று கூறியிருக்கிறார்கள்.

அகில இந்திய விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு (AIKSCC) நிர்வாகிகள் கூறுகையில், “ உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட எந்தவொரு குழு நடவடிக்கைகளிலும் நாங்கள் பங்கேற்க மாட்டோம். உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் எங்கள் போராட்டத்தை முடித்துக் கொள்வதாகவும் இல்லை. சட்டங்கள் திரும்பப் பெறப்படும் வரை எங்கள் போராட்டம் தொடரும்.

உச்ச நீதிமன்றம் அமைத்த குழு எங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. ஏனென்றால் அந்தக் குழு உறுப்பினர்கள் மூன்று வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக அறியப்பட்டவர்கள், அதற்காக தீவிரமாக வாதிட்டவர்கள். நாங்கள் ஒரு குழுவின் முன் ஆஜராக மாட்டோம் என்று நேற்றே நாங்கள் எதிர்த்தோம். . குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் அரசாங்கத்திற்கு ஆதரவானவர்கள் ... அத்தகைய குழுவை ஏற்க முடியாது. உச்ச நீதிமன்றம் அமைத்த இந்தக் குழு கவனத்தை திசை திருப்ப ஒரு வழியாகும்.”என்று கூறியிருக்கிறார்கள்.

மேலும், "விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகள் மீதான போராட்டம் ஜனவரி 13, 18, மற்றும் 23 ஆகிய தேதிகளில் முந்தைய அறிவிப்பின் படி தொடரும். விவசாயிகள் அரசாங்கத்துடன் தொடர்பு கொள்ள விரும்புகிறார்கள், உச்சநீதிமன்றத்தோடு அல்ல” என்றும் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினர் தெரிவித்தார்கள்.

பாரதிய கிசான் யூனியனின் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் டிக்கைட்டிடம், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து கேட்கப்பட்டபோது, ​​ “சட்டம் திரும்பப் பெறும் வரை வீடு திரும்ப மாட்டேன்” என்று கூறியுள்ளார்.

-வேந்தன்

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

டிஜிட்டல் திண்ணை: சீமானை விட்டுப் பிடிக்கும் ஸ்டாலின்

12 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சீமானை விட்டுப் பிடிக்கும் ஸ்டாலின்

சட்டமன்றத்தை கலைக்கத் தயாரா: முதல்வருக்கு ஜெயக்குமார் கேள்வி! ...

3 நிமிட வாசிப்பு

சட்டமன்றத்தை கலைக்கத் தயாரா: முதல்வருக்கு ஜெயக்குமார் கேள்வி!

செவ்வாய் 12 ஜன 2021