மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 12 ஜன 2021

காங்கிரஸுக்கு சீட்டை உயர்த்திய ஸ்டாலின்: உதயநிதி பேச்சு பின்னணி!

காங்கிரஸுக்கு சீட்டை உயர்த்திய ஸ்டாலின்:  உதயநிதி பேச்சு பின்னணி!

திமுகவின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தான் கலந்துகொள்ளும் பிரச்சாரப் பொதுக்கூட்டங்களில், நிகழ்ச்சிகளில் கூட்டணி பற்றி சில வித்தியாசமான கருத்துகளை போட்டு உடைத்து விடுகிறார். ஒருவேளை திமுகவின் தலைவர் ஸ்டாலினே தன் மனதில் உள்ளவற்றை உதயநிதி மூலமாக போட்டு உடைத்துவிடுகிறாரோ என்று திமுக கூட்டணிக் கட்சியினர் இதை எச்சரிக்கையாகவே பார்க்கின்றனர்.

திமுக 200 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று முதலில் கூறியவர் உதயநிதி. கடந்த நாங்குநேரி இடைத்தேர்தலுக்கு முன்னதாகவே, ‘நாங்குநேரியை திமுகவுக்குக் கொடுத்துவிடுங்களேன்’ என்று பொது மேடையிலேயே காங்கிரசைக் கேட்டவர் உதயநிதி.

இப்போது இன்னொரு விதத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறார் உதயநிதி. ஜனவரி 11 ஆம் தேதி சென்னை தி.நகரில் நடந்த திமுக பொங்கல் விழாவில் பேசிய உதயநிதி, ‘திமுக வெற்றிவாய்ப்புள்ள தொகுதிகளை நாம் கூட்டணிக் கட்சிக்கு கொடுத்துவிட்டு உட்கார்ந்திருக்காமல், இனி திமுகவே போட்டியிட வேண்டும். அப்படிப் பார்த்தால் இந்த மாவட்டத்தில் தி.நகர், மயிலாப்பூர் தொகுதிகளில் திமுகவே போட்டியிடும். இதை தலைவர் ஸ்டாலின் சொல்லுவதற்கு முன்பு நானே சொல்கிறேன்” என்று உதயநிதி பேசியிருக்கிறார்.

இது காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மயிலாப்பூர் தொகுதியை காங்கிரஸ் எதிர்பார்த்திருந்த நிலையில், திமுக சார்பில் மாவட்டச் செயலாளரான மயிலை வேலு மயிலாப்பூர் தொகுதியில் இம்முறை போட்டியிடுகிறார் என்று தகவல்கள் கட்சிக்குள் பரவின. கிட்டத்தட்ட அதை உறுதி செய்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

இந்நிலையில் காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள் என்ற கேள்வி திமுகவில் எழுந்திருக்கிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கான இடங்கள் இறுதி செய்யப்பட்டால், அடுத்தடுத்து மற்ற கட்சிகளுக்கான இடங்களும் முடிவு செய்யப்பட்டுவிடும் என்பதால் காங்கிரசுக்கான தொகுதிகள் பற்றிய கேள்வி கூட்டணியின் பிற கட்சிகளிடமும் எதிரொலிக்கிறது.

இதுபற்றி அறிவாலயத்தில் விசாரித்தபோது, “திமுக கூட்டணியில் காங்கிரஸ் 2011 ஆம் ஆண்டு 63 இடங்களில் போட்டியிட்டு 5 தொகுதிகளில் மட்டுமே வென்றது. அதேபோல, 2016 தேர்தலில் 43 தொகுதிகளில் போட்டியிட்டு 8 தொகுதிகளில் வென்றது. இதே நிலையை இந்தத் தேர்தலில் அனுமதிக்கக் கூடாது என்பதில் ஸ்டாலின் தெளிவாக இருக்கிறார். ஏனென்றால் காங்கிரஸுக்கு கொடுக்கும் இடங்கள் அதிமுகவின் உறுதியான வெற்றித் தொகுதிகளாக ஆகிவிடக் கூடாது என்று கருதுகிறார். அதனால் காங்கிரஸுக்கு அதன் பலத்துக்கு ஏற்ப 15 தொகுதிகளே தருவதாக முடிவு செய்திருந்தார் ஸ்டாலின். ஆனால் கடந்த வாரத்தில் இருந்து காங்கிரஸுக்கு 5 இடங்கள் கூடுதலாக 20 இடங்கள் ஒதுக்கலாம் என்ற முடிவில் இருக்கிறார் ஸ்டாலின்.

இதைத் தெரிந்துகொண்டுதான் உதயநிதி காங்கிரஸுக்கு என்று கருதப்படும் சில தொகுதிகளையே குறிப்பிட்டு, திமுகதான் நிற்கும் என்று உறுதியாகப் பேசிவருகிறார். எனவே காங்கிரஸுக்கு தற்போது 20 இடங்கள் என்பதே நிலவரமாக இருக்கிறது”: என்கிறார்கள்.

இதற்கிடையே, “தொண்டர்களின் கருத்தையே நான் சொன்னேன்” என்று தனது பேச்சுக்கு விளக்கமும் அளித்துள்ளார் உதயநிதி.

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே!

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

16 நிமிட வாசிப்பு

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்!

செவ்வாய் 12 ஜன 2021