மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 12 ஜன 2021

கூட்டணியின் முதல்வர் வேட்பாளர்: அதிமுகவோடு மோதும் தேமுதிக

கூட்டணியின் முதல்வர் வேட்பாளர்: அதிமுகவோடு மோதும் தேமுதிக

அதிமுக கூட்டணியில் அதிமுகவைத் தவிர வேறு எந்தக் கட்சிகள் இருக்கின்றன என்பது இன்னும் தெளிவாகாத நிலையில்... ஜனவரி 11ஆம் தேதி நடந்த தேமுதிகவின் அவசர ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக மீது அதிருப்தியில் வெடித்திருக்கிறார் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா.

தேமுதிக சென்னை மண்டலத்துக்குட்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டத் தேர்தல் பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், தொகுதிப் பொறுப்பாளர்கள் உட்பட 75 பேரை அவசரமாக அழைத்து நேற்று ஜனவரி 11ஆம் தேதி, அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தினார் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா. கூட்டம் மதியம் ஒரு மணிக்கு தொடங்கி மாலை மூன்று மணிக்கு முடிந்தது.

கூட்டத்தில் பிரேமலதா பேசும்போது, “நாம் கூட்டணி தர்மத்தை இதுவரையில் மீறவில்லை. ஆனால் அவர்கள்தான் நமக்கு ஏற்ற மரியாதை தரவில்லை. இப்போதுகூட நாம் கேட்கும் தொகுதியைக் கொடுக்க யோசிக்கிறார்கள். உங்களுக்கு எல்லாம் ஒரு நல்ல வழிகாட்ட வேண்டும் என்பதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டுதான் நமது தலைவர் இருக்கிறார். உங்கள் மாவட்டத்தில் நமக்கு சாதகமான தொகுதிகள் எது எது என்று பட்டியல் கொடுங்கள்” என்று கூட்டத்திலேயே அதைக் கேட்டு வாங்கினார் பிரேமலதா.

மேலும் அவர், “இந்தத் தொகுதிகளில் பூத் கமிட்டி அமைச்சிருக்கீங்களா? என்ன வேலைகள் செய்திருக்கீங்க?” என்றும் விசாரித்து அறிந்துள்ளார்.

அப்போது பெரும்பாலானோர் அழுத்தமாக சொன்ன கருத்து, “கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலில் சென்னை மண்டலத்தில் நாம் வெற்றி பெற்ற எட்டு தொகுதிகளையும் விடாமல் கேட்டுபெற வேண்டும்” என்பதுதான்.

“நிச்சயம் கேட்போம். நமது கட்சியில் இருந்த சில குப்பைகள் வெளியேறிவிட்டது. நீங்கள் ஒவ்வொருவரும் முத்து போன்றவர்கள் உங்கள் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்” என்று பேசியுள்ளார்.

கூட்டம் முடிந்ததும் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய பிரேமலதா, “தேமுதிக 7 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. சென்னை மண்டலப் பொறுப்பாளராக நான் நியமிக்கப்பட்டுள்ளேன். தேமுதிகவினர் தேர்தல் பணியைத் தொடங்கி விட்டோம். தேர்தல் வியூகம், பூத் கமிட்டி குறித்து இன்று ஆலோசனை நடத்தினோம். நிர்வாகிகளின் கருத்துப்படி தேமுதிகவினர் தேர்தல் வியூகம் அமைப்போம் .

இந்த நிமிடம் வரை அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறோம். விரைவில் பொதுக்குழு, செயற்குழுவைக் கூட்டி கூட்டணி குறித்து இறுதி முடிவை விஜயகாந்த் அறிவிப்பார்.

தேமுதிக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி. எங்களுக்கான சின்னத்தில்தான் நாங்கள் போட்டியிடுவோம்.

அதிமுக கூட்டணியில் எத்தனை தொகுதிகள் பெறுவோம் என ஒருதலைபட்சமாக இப்போது நான் கூற முடியாது. அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக அக்கட்சியால் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்ட நிலையில் நாங்கள் அது குறித்து கருத்து கூற முடியாது. கூட்டணியினர் முடிவு செய்யும் முதல்வர் வேட்பாளர் யாரோ அவர்களை ஏற்போம்” என்று எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொள்ளாத மன நிலையில்தான் பேசியிருக்கிறார் பிரேமலதா.

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே!

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

16 நிமிட வாசிப்பு

தி.மு.க என்ற மரத்தில் பழுத்த கனியே எம்.ஜி.ஆர்

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்! ...

4 நிமிட வாசிப்பு

உள்ளாட்சித் தேர்தல்: உச்ச நீதிமன்றத்திற்கு போகலாம்- உயர் நீதிமன்றம்!

செவ்வாய் 12 ஜன 2021