மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 11 ஜன 2021

தினகரனுக்கு ஆல் தி பெஸ்ட் சொன்ன அமித் ஷா

தினகரனுக்கு ஆல் தி பெஸ்ட் சொன்ன அமித் ஷா

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கடந்த ஜனவரி 7 ஆம் தேதி சென்னையில் இருந்து பெங்களூரு வழியாக டெல்லி சென்றவர் முக்கியத் தலைவர்களை சந்தித்துவிட்டு மூன்றாவது நாளில் தமிழகம் திரும்பியுள்ளார்.

இதுபற்றி மின்னம்பலத்தில், சசிகலா விடுதலையில் தடையா? மீண்டும் டெல்லி சென்ற தினகரன் என்ற தலைப்பில் ஜனவரி 9ஆம் தேதி வெளியிட்டிருந்தோம்.

சசிகலா விடுதலை ஆவதில், எந்த விதமான சட்ட சிக்கல்களும் வந்துவிடக் கூடாது என்று வழக்கறிஞர்களுடன் ஆலோசனைகள் செய்த தினகரன், பாஜக முக்கிய தலைவர்களை சந்திக்க தீவிரமான முயற்சியில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் டெல்லியிலிருந்து க்ரீன் சிக்னல் கிடைத்தது.

சென்னை ஏர்போர்ட்டிலிருந்து டெல்லி சென்றால் தகவல் கசிந்து விடும் என்பதால், சாலை வழியாக பெங்களூரு ஏர்போர்ட்டுக்கு காரில் சென்ற தினகரன் தனது உதவியாளர் ஜனாவுடன் ஜனவரி 7ஆம் தேதி, டெல்லி சென்றார்.

நண்பர் மல்லிகார்ச்சுனா மூலமாக பாஜக பிரமுகர்கள் பரிந்துரை செய்த இடத்தில் தங்கினார் டிடிவி தினகரன்.

ஜனவரி 8,9 தேதிகளில் பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இருவரையும் சந்தித்தார் டிடிவி தினகரன். சந்திப்பின் போது குக்கர் சின்னம் கிடைத்ததற்கு நன்றி சொல்லியுள்ளார்.

அதன் பிறகு தமிழ் நாடு அரசியல் பற்றி பேசியுள்ளார்கள். தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது பல குறைகளையும் குற்றசாட்டுகளையும் கூறிய டிடிவி தினகரன், சசிகலாவை ரிலீஸ் செய்வதில் சட்டசிக்கல்கள் ஏற்படாமல் உதவி செய்யுமாறு கேட்டுள்ளார்.

அதற்கு அமித்ஷா, “எங்களால் எந்த தடையும் ஏற்படாது. ஆல் தி பெஸ்ட்” என்று சொன்னதோடு, தினகரனைப் பாராட்டி, வாழ்த்தியனுப்பியுள்ளார். முன்னதாக பாஜகவின் மூத்த தலைவரான சுப்பிரமணிய சுவாமியையும் சந்தித்துள்ளார் டிடிவி தினகரன்.

டெல்லி பயணத்தை மன மகிழ்ச்சியுடன் முடித்துவிட்டு ஜனவரி 9ஆம் தேதி இரவு டெல்லி டூ பெங்களூரு விமானத்தில் வந்தவர், அங்கிருந்து காரில் சாலை வழியாக விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் பகுதியில் உள்ள தனது பண்ணை வீட்டுக்கு திரும்பினார்.

தினகரனின் டெல்லி பயணத்துக்குப் பின்பு, “27ஆம் தேதிக்கு முன்பே சசிகலா வெளியில் வருகிறார்” என்கிறார்கள் அமமுக நிர்வாகிகள்.

அதிமுக அமைப்புத் தேர்தல்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி ...

9 நிமிட வாசிப்பு

அதிமுக அமைப்புத் தேர்தல்: ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு எடப்பாடி போட்டி?

‘கவலைப்படாதீங்க’ : ஓட்டுநருக்கு ஆறுதல் கூறிய ராதாகிருஷ்ணன் ...

3 நிமிட வாசிப்பு

‘கவலைப்படாதீங்க’ : ஓட்டுநருக்கு ஆறுதல் கூறிய ராதாகிருஷ்ணன்

என்னை எதிர்த்தால் நீக்கம்- எடப்பாடியின் செயற்குழு மெசேஜ்

6 நிமிட வாசிப்பு

என்னை எதிர்த்தால் நீக்கம்- எடப்பாடியின் செயற்குழு மெசேஜ்

திங்கள் 11 ஜன 2021