மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 11 ஜன 2021

என்னை வேதனைப்படுத்தாதீர்கள்- ரஜினி

என்னை வேதனைப்படுத்தாதீர்கள்-  ரஜினி

நடிகர் ரஜினிகாந்த், தான் அரசியலுக்கு வரவில்லை என்று கடந்த டிசம்பர் 29 ஆம் தேதி தெளிவாக அறிவித்து விட்ட பிறகும்.. ஜனவரி 10ஆம் தேதி சென்னையில் ரஜினி ரசிகர்கள் வள்ளுவர் கோட்டத்தில் ஒன்றுகூடி ரஜினி மீண்டும் அரசியலுக்கு வர வேண்டும் என்று கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தினார்கள்.

இதுகுறித்து ரஜினிகாந்த் இன்று ஜனவரி 11 தனது ட்விட்டரில் ஒரு கடிதத்தை வெளியிட்டிருக்கிறார்.

“நான் அரசியலுக்கு வராதது பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சிலர் ரஜினி மக்கள் மன்ற பதவி பொறுப்பிலிருந்தும் மன்றத்தில் இருந்தும் நீக்கப்பட்ட பலருடன் சேர்ந்து சென்னையில் ஒரு நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறார்கள்”என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் ரஜினி.

நேற்றைய நிகழ்ச்சியில் ரஜினி மக்கள் மன்ற பொறுப்பாளர்கள் பெரும்பான்மையோர் கண்ணில் படவில்லை என்பதோடு, ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து நடவடிக்கை எடுக்கப்பட்டவர்களே அதிகம் கலந்துகொண்டார்கள் என்பதை நேற்று மின்னம்பலத்தில், வள்ளுவர் கோட்டத்தில் திரண்ட ரசிகர்கள்: தனியறையில் ரஜினி என்ற தலைப்பில் எழுதியிருந்தோம்.

அதையே தனது கடிதத்திலும் குறிப்பிட்டிருக்கும் ரஜினி தொடர்ந்து,

“கட்டுப்பாட்டுடனும் கண்ணியத்துடனும் நடத்தியதற்கு என்னுடைய பாராட்டுக்கள். இருந்தாலும் தலைமையின் உத்தரவையும் மீறி நடத்தியது வேதனை அளிக்கிறது.

தலைமையின் வேண்டுகோளை ஏற்று இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத மக்கள் மன்றத்தினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி.

நான் ஏன் இப்பொழுது அரசியலுக்கு வர முடியவில்லை என்பதற்கான காரணங்களை விரிவாக விளக்கியுள்ளேன். நான் என் முடிவை கூறிவிட்டேன் . தயவு கூர்ந்து இதற்கு பிறகும் நான் அரசியலுக்கு வரவேண்டும் என்று யாரும் இது போன்ற நிகழ்வுகளை நடத்தி என்னை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

திங்கள் 11 ஜன 2021