மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 11 ஜன 2021

கலைஞர் பாசம் இன்னும் போகலையேப்பா” : திருச்சியில் குஷ்பு!

கலைஞர் பாசம் இன்னும் போகலையேப்பா” : திருச்சியில் குஷ்பு!

'மிகச் சரியான முடிவு எடுத்து விட்டதாக’ கூறி திமுகவில் இணைந்து, பிறகு, ‘தாய் வீட்டிற்கு வந்த திருப்தி இருப்பதாக’ காங்கிரசில் காலடி வைத்த நடிகை குஷ்பு கடந்த 2020 அக்டோபர் மாதம் பிஜேபியில் இணைந்த பிறகு முதல்முறையாக நேற்று(10.1.2021) திருச்சி வந்திருந்தார்.

ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட கோப்பு கிராமத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் ஏற்பாடு செய்திருந்த பொங்கல் விழாவைத் துவக்கி வைக்கக் காலை 10 மணிக்கு வருகை தரவிருந்த நடிகை குஷ்புவிற்காக 8 மணி முதல் பொங்கல் பானைகளோடு காத்திருந்தனர் பெண்கள். ஆனால், மதியம் 1 மணி ஆகியும் அவர் வராததால் தாங்களாகவே பொங்கல் வைத்து முடித்து விட்டனர். ஒருவழியாக மாலை 5 மணிக்கு வந்த குஷ்பு நேராக மேடைக்குச் சென்று மைக் பிடித்தார்.

"எடப்பாடி ஆட்சி சூப்பர். மோடியை மீண்டும் பிரதமராக்க வேண்டும்" என 5 நிமிடங்கள் பேசிவிட்டு மேடையிலிருந்து கீழே இறங்கி பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தார். அப்போது, ‘கலைஞர் - ஸ்டாலின் ஒப்பீடு’ குறித்த நிருபர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளித்த குஷ்பு, ‘கருணாநிதியை ஸ்டாலினோடு மட்டுமல்ல யாரோடும் ஒப்பிட முடியாது’ எனக் கூறவே, "கலைஞர் பாசம் இன்னும் போகலையேப்பா..!" என கமெண்ட் அடித்தார் கூட்டத்திலிருந்த பாஜக தொண்டர் ஒருவர்.

2 நிமிட பத்திரிக்கையாளர் சந்திப்பை முடித்துவிட்டு கிளம்ப முயன்ற குஷ்புவிடம், அவரை பார்க்க வந்த கூட்டத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் திருச்சி மாவட்ட பாஜக துணைத் தலைவி தமிழ்ச்செல்வியின் மண்டை உடைந்து விட்டதாகக் கூறப்படவே அவரை சந்தித்து அரை நிமிடம் ஆறுதல் கூறிய குஷ்பு காரில் ஏறிக் கிளம்பி விட்டார். அதிக பட்சம் அரை மணி நேரம் மட்டுமே நடந்த ‘நம்ம ஊர் பொங்கல் விழாவில்’ கலந்து கொள்ள வந்த குஷ்பு இறுதிவரை பொங்கல் வைத்த பெண்களைச் சந்திக்கவே இல்லை என்பதுதான் நிகழ்ச்சியின் ஹைலைட்டே!

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்  ...

5 நிமிட வாசிப்பு

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்   

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்: அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா? ...

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்:  அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா?

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி! ...

2 நிமிட வாசிப்பு

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி!

திங்கள் 11 ஜன 2021