மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 11 ஜன 2021

10 நாட்களில் மீண்டும் பொய்த்த தமிழருவி மணியன் பேச்சு!

10 நாட்களில் மீண்டும் பொய்த்த  தமிழருவி மணியன் பேச்சு!

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று அறிவித்த கடந்த டிசம்பர் 29 ஆம் தேதிக்கு மறுநாள்..‌. காந்திய மக்கள் இயக்கத் தலைவரும் ரஜினி தொடங்கியிருந்த கட்சியின் மேற்பார்வையாளராக செயல்பட்டவருமான தமிழருவி மணியன் ஒரு உருக்கமான அறிக்கை வெளியிட்டார்.

"இனி இறப்பைத் தழுவும் வரையில் நான் அரசியலுக்கு வர மாட்டேன்" என்று அதில் உறுதிபடத் தெரிவித்திருந்தார்.

ஆனால் அவரது நிலைப்பாடு 10 நாட்களுக்குள் மீண்டும் மாறியிருக்கிறது.

காந்திய மக்கள் இயக்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் ஜனவரி 10ஆம் தேதி கோவையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழருவி மணியனும் கலந்து கொண்டார்.

கூட்டம் குறித்து அந்த இயக்கத்தின் பொதுச்செயலாளர் குமரய்யா வெளியிட்ட செய்தியில்...

"இந்தக் கூட்டத்தில் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவராக தமிழருவி மணியன் தொடர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனடிப்படையில் காந்திய மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவராக தமிழருவி மணியன் தொடர்கிறார்.

காந்திய மக்கள் இயக்கத்தின் உறுப்பினர் எண்ணிக்கையை ஒரு லட்சத்திலிருந்து 10 லட்சமாக உயர்த்துவதற்கு நிர்வாக குழு தீவிரமாக செயல்படும்" என்று தெரிவித்ததோடு...

"காந்திய மக்கள் இயக்கம் ரஜினி மக்கள் மன்றத்தோடு இணைக்கப்படும் என்ற ஒரு செய்தி உலவி வருவது கற்பனையானது. ரஜினி மக்கள் மன்றத்தோடு காந்திய மக்கள் இயக்கம் சகோதர இயக்கமாக தொடரும்"என்றும் அறிவித்துள்ளார்.

ஏற்கனவே 2016-ஆம் ஆண்டு மக்கள் நல கூட்டணி தோல்வி அடைந்த போதும் அரசியலை விட்டு விலகுவதாக தமிழருவி மணியன் அறிவித்திருந்தார். ஆனால் அடுத்தது ரஜினியை பற்றிக்கொண்டு தன் அரசியலை தொடர்ந்தார்.

இந்த சூழலில் ரஜினியும் அரசியலுக்கு வர மறுத்ததை அடுத்து மீண்டும் அரசியல் துறவறம் பூணப் போவதாக அறிவித்த தமிழருவி மணியன் அடுத்த பத்து நாட்களில் தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு அரசியலில் தொடர்கிறார்.

தமிழருவி மணியனின் அடுத்த அரசியல் பயணம் யாருடன் இருக்கும் என்ற யூகிப்புகள் சமூக தளங்களில் அலசப்பட்டு வருகின்றன.

திமுகவுக்கு படையெடுக்கத் தயாராகும் மதிமுக மாசெக்கள்: ஸ்டாலின் ...

10 நிமிட வாசிப்பு

திமுகவுக்கு படையெடுக்கத் தயாராகும் மதிமுக மாசெக்கள்:  ஸ்டாலின் ரியாக்‌ஷன்

அரசுச் செயலர் அமுதாவின் வாட்ஸ்அப் எச்சரிக்கை!

6 நிமிட வாசிப்பு

அரசுச் செயலர் அமுதாவின் வாட்ஸ்அப் எச்சரிக்கை!

தங்கவேட்டை நடத்தினாரா விஜயபாஸ்கர்?  அமலாக்கத் துறையின் 8 மணி ...

4 நிமிட வாசிப்பு

தங்கவேட்டை நடத்தினாரா விஜயபாஸ்கர்?   அமலாக்கத் துறையின் 8 மணி நேர விசாரணை!

திங்கள் 11 ஜன 2021