மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 11 ஜன 2021

ஆளுநருக்கு எதிராக முதல்வரின் அடுத்தடுத்த போராட்டங்கள்!

ஆளுநருக்கு எதிராக முதல்வரின் அடுத்தடுத்த போராட்டங்கள்!

புதுச்சேரி துணைநிலை ஆளுநரைத் திரும்பப் பெற வலியுறுத்தி நடைபெற்று வந்த தர்ணா போராட்டத்தைத் தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அரசின் செயல்பாடுகளுக்குத் தடையாக இருப்பதாகக் கூறி அவரை திரும்பப் பெற வேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் ஜனவரி 8ஆம் தேதி முதல் நான்கு நாட்களுக்குத் தர்ணா போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி அண்ணா சிலை மறைமலை அடிகள் சாலையில் நடந்த போராட்டக் களத்திலேயே முதல்வர் நாராயணசாமி இரவு பகலாகத் தங்கி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

நேற்று மூன்றாவது நாளாகப் போராட்டம் தொடர்ந்தது. இந்தக் கூட்டத்தில் நேற்று இரவு பேசிய முதல்வர் நாராயணசாமி, பதவி முக்கியமல்ல; ஜனநாயகம், மக்களின் உரிமைதான் முக்கியம். புதுச்சேரியின் தனித்தன்மை காப்பாற்றப்பட வேண்டும். தனிநபருக்கு ஏன் இத்தனை அடுக்கு பாதுகாப்பு?

கிரண்பேடியை எதிர்த்தாலும் மத்திய அரசிடமிருந்து பல்வேறு விருதுகளைப் பெற்று இருக்கிறோம். கிரண்பேடி தடுக்கவில்லை என்றால் வளர்ச்சியின் உச்சத்திற்குச் சென்று இருப்போம். படிப்படியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் உரிமைகளைப் பறித்து வருகின்றனர். மாநில மக்களின் சுதந்திரம் மற்றும் உரிமையை யார் பறிக்க நினைத்தாலும் உயிரைவிடக்கூட தயாராக இருக்கிறோம்.

எனவே அடுத்தடுத்து பல கட்ட போராட்டங்கள் நடத்த முடிவு செய்துள்ளோம். அதன்படி வரும் ஜனவரி 22ஆம் தேதி ‘கிரண்பேடியே திரும்பி போ’ என்று கையெழுத்து இயக்கமும், 29ஆம் தேதி அனைத்து தொகுதிகளிலும் கண்டனப் போராட்டமும், பிப்ரவரி 5ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டமும், இறுதியாகப் பிப்ரவரி 15 முதல் 20ஆம் தேதிக்குள் ஒரு நாள் பந்த் போராட்டமும் நடைபெறும் என்று தெரிவித்த முதல்வர் நாராயணசாமி தர்ணா போராட்டத்தைத் தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளார்

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான ...

7 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி: தலைமைச் செயலாளர் இறையன்புவின் இனிப்பான அதிரடி!

மின்னம்பலம் செய்தி எதிரொலி: அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் ...

5 நிமிட வாசிப்பு

மின்னம்பலம் செய்தி எதிரொலி:  அமைச்சர் கண்ணப்பனுக்கு முதல்வர் அறிவுறுத்தல்!

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

5 நிமிட வாசிப்பு

வேட்டையாடும் திமுக: விரக்தியில் விஜயகாந்த்

திங்கள் 11 ஜன 2021