மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 10 ஜன 2021

யாருக்கும் விசுவாசம் வேண்டாம்: கட்சிக்கு விசுவாசமாக இருங்கள் - ஓ.பன்னீர்

யாருக்கும் விசுவாசம் வேண்டாம்: கட்சிக்கு விசுவாசமாக இருங்கள் - ஓ.பன்னீர்

அதிமுக பொதுக்குழுவில் துணை முதல்வரும் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில் எடப்பாடி ஆட்சிக்கு நல்ல பெயர் இருக்கிறது என்று குறிப்பிட்டார்.

அவர் பேசும்போது, “அ.தி.மு.க.வில் சாதாரண தொண்டன்கூட முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சராக, எம்.பி., எம்.எல்.ஏ. என பல பதவிகளில், பல பொறுப்புகளில் இருப்பதை உருவாக்கி தந்தவர் அம்மா. எம்.ஜி.ஆர், அம்மா ஆகியோர் உருவாக்கி தந்திருக்கிறார்கள். அவர்கள் வகுத்து தந்த பாதையில் நாம் பயணித்துக்கொண்டிருக்கிறோம்.

தமிழக முதல்வர் சகோதரர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் மீது மக்கள் ஆழ்ந்த நம்பிக்கையும், நல்ல பெயரும் கொண்டுள்ளனர். எங்கு சென்றாலும் ஆட்சி நன்றாக நடக்கிறது. ஒற்றுமையாக செயல்படுகின்றனர் என்று கூறுகின்றனர். இப்படி ஒரு சூழ்நிலை, நல்ல பெயர் எந்த ஒரு ஆளும் கட்சிக்கும் இருந்தது கிடையாது. மக்களுடைய இந்த மகத்தான ஆதரவை, சிந்தாமல், சிதறாமல் இரட்டை இலை சின்னத்தை நோக்கி கொண்டு வந்து சேர்க்க வேண்டும். கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும், கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும் கொண்டு வந்து சேர்க்கவேண்டிய தலையாய கடமை தொண்டர்களுக்கு இருக்கிறது.

அம்மா வகுத்து தந்த பாதையில் இருந்து ஒருபோதும் விலகிச் செல்லமாட்டோம். கட்சியின் தொண்டர்கள் தான் நம்முடைய எஜமான்கள். முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் அனைவருமே மக்களுக்கு சேவையாற்றும் சேவகர்கள். தமிழக மக்கள்தான் நமக்கு உத்தரவிடும் முதலாளிகள். நாம் எல்லோரும் அவர்களுக்காகப் பணியாற்றுபவர்கள். நமது கட்சியில் வேட்டி கட்டும் ஆண்கள் உண்டு. ஆனால் கோஷ்டி சேர்க்கும் ஆட்கள் கிடையாது. கட்சி தொண்டர்கள் எனக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்று நான் கூறியது கிடையாது. முதல்வரும் எனக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்று கூறியது கிடையாது. யாரும் தங்களுக்கு விசுவாசமாக இருக்குமாறு கூறியது கிடையாது. கட்சிக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்றும், கட்சிக்காக உழையுங்கள் என்றும் தான் கூறுகிறோம்.

அ.தி.மு.க.வுக்கு எதிர்க்கட்சிகளே இல்லை என்ற நிலையை வரும் தேர்தலில் உருவாக்குவோம். நாம் அனைவரும் ஒற்றுமையாக உழைத்து 2021இல் அடையும் வெற்றி அரசியல் வரலாற்றில் இதுவரை யாரும் கண்டிராத வெற்றியாக இருக்க வேண்டும்” என்று பேசினார் ஓ.பன்னீர்செல்வம்.

-வேந்தன்

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்  ...

5 நிமிட வாசிப்பு

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்   

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்: அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா? ...

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்:  அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா?

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி! ...

2 நிமிட வாசிப்பு

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி!

ஞாயிறு 10 ஜன 2021