மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 9 ஜன 2021

காங்கிரஸுக்கான இடங்களை ஸ்டாலின் முடிவு செய்வார்: மணிசங்கர் ஐயர்

காங்கிரஸுக்கான இடங்களை ஸ்டாலின் முடிவு செய்வார்: மணிசங்கர் ஐயர்

திமுக கூட்டணியில் காங்கிரஸூக்கு எத்தனை இடங்கள் கேட்பது என மணிசங்கர் ஐயர் பதிலளித்துள்ளார்.

திமுக தலைமையில் மக்களவைத் தேர்தலை சந்தித்த அதே கூட்டணி, சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவும் தயாராகி வருகிறது. தமிழக காங்கிரஸ் பொறுப்பாளரான தினேஷ் குண்டு ராவ், தொகுதிப் பங்கீட்டில் தேவையற்ற பேரங்கள் இருக்காது, ஸ்டாலினை முதல்வராக்குவதே ராகுல் எங்களுக்கு இட்ட உத்தரவு என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் காங்கிரஸ் சார்பில் தேர்தல் பணிக் குழுக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவில் காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் ஐயர் இடம்பெற்றிருந்தார். இந்த நிலையில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு எவ்வளவு இடம் என்பது குறித்து அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஊடகத்திற்குப் பேட்டியளித்த மணிசங்கர் ஐயர், “சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்கு எவ்வளவு இடங்கள் என்பதை ஸ்டாலின்தான் முடிவு செய்வார். எங்களுக்கு வழங்கப்படுவதை நாங்கள் முழுமனதோடு ஏற்றுக்கொள்வோம்” என்றார்.

மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை பேச்சுவார்த்தையில் முன்வைப்போம் என்று தெரிவித்த அவர், “திமுக அங்கு ஒருமுறை கூட வெற்றி பெற்றதில்லை. ஆனால், முன்னதாக காங்கிரஸ் வெற்றி வேட்பாளர் அங்கு இருந்தார். எண்ணிக்கையில் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை, ஆனால், ஒரு சில இடங்களில் மாற்றம் இருக்கும்” என்று கருத்து தெரிவித்துள்ளார் மணிசங்கர் ஐயர்.

ஒரே மேடையில் அதிமுக - அமமுக: ஜெயலலிதா ‘நடத்தி வைத்த’ புதுமை!

8 நிமிட வாசிப்பு

ஒரே மேடையில் அதிமுக - அமமுக: ஜெயலலிதா ‘நடத்தி வைத்த’ புதுமை!

நிர்மலாவுடன் வைகோ, திருமாவளவன் சந்திப்பு: கவனிக்கும் திமுக ...

12 நிமிட வாசிப்பு

நிர்மலாவுடன் வைகோ, திருமாவளவன் சந்திப்பு: கவனிக்கும் திமுக தலைமை!

அதிமுக தேர்தல்: திடீர் திருப்பம் ஏற்படுமா?

5 நிமிட வாசிப்பு

அதிமுக தேர்தல்: திடீர் திருப்பம் ஏற்படுமா?

சனி 9 ஜன 2021