மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 9 ஜன 2021

பிஜேபிக்கு அதிமுகவின் பொதுக்குழு மெசேஜ்!

பிஜேபிக்கு அதிமுகவின் பொதுக்குழு மெசேஜ்!

அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டத்தில் மீண்டும் பாஜக தாக்கப்பட்டுள்ளது. இன்றைய (ஜனவரி 9) பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி பாஜகவை நம்பி அதிமுக இல்லை என்றும், அதிமுகவை நம்பிதான் பாஜக இருக்கிறது என்பதை தெளிவாக தீர்மானகரமான வார்த்தைகளால் பேசியிருக்கிறார்.

கேபி.முனுசாமியின் பேச்சில், “ எந்த காலகட்டத்திலும் யார் போனாலும் யார் வந்தாலும் கவலைப்படாமல் சளைக்காமல் உழைக்கும் தொண்டர்களைக் கொண்ட கட்சி இது. நமது முதல்வர் சிறப்பான ஆட்சி நடத்துகிறார். நமது ஒருங்கிணைப்பாளர் ஓ.பிஎஸ் மிகப்பெரிய குடும்பமான அதிமுகவில் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பொறுமை மிக்கவர். பக்குவமாக நடத்திச் செல்கிறவர்.இவர்களின் தலைமையிலே நாம் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும். அதற்கு யாரும் தடை கிடையாது” என்றவர்,

“சிலர் வெளியே வருவதால் ஒன்றும் ஆகப் போவதில்லை. அதிமுகவில் இனி ஸ்லீப்பர் செல்கள் என்பதே இல்லை” என்று சசிகலாவை பெயர் குறிப்பிடாமல் பேசினார்.

ஏற்கனவே பிரச்சாரத் தொடக்கப் பொதுக்கூட்டத்தில் பாஜகவை தாக்கிய முனுசாமி இந்த பொதுக்குழு கூட்டத்திலும் பாஜகவை தாக்கிப் பேசியிருக்கிறார். பாஜக என்று பெயர் குறிப்பிடாமல் தேசியக் கட்சிகள் என்று சொல்லியிருக்கிறார்.

“தேசியக் கட்சிகள் எல்லாம் நமக்கு ஒரு பொருட்டே அல்ல. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தேசியக் கட்சிகள் ஒன்று திமுகவின் தோளேற வேண்டும் இல்லையேல் அதிமுகவின் தோளேற வேண்டும். தமிழகத்தில் திமுகவுக்குதான் அதிமுகவுக்குதான் நேரடிப் போட்டி. மற்ற தேசிய கட்சிகள் எல்லாம் ஆடியன்ஸ்தான்” என்று குறிப்பிட்டுப் பேசினார்.

தேசியக் கட்சி என்று குறிப்பிட்டாலும் இப்போது அதிமுகவோடு தோழமையாய் இருக்கும் கட்சி பாஜகதான். காரணம் பிற தேசியக் கட்சிகளான காங்கிரஸ், இடதுசாரிகள் திமுக அணியில் இருக்கிறார்கள். எனவே தேசியக் கட்சி என்று கே.பி. முனுசாமி சொல்வது பாஜகவைத்தான். சமீப நாட்களாக அதிமுகவுக்கும் பாஜகவுக்குமான உறவில் விரிசல் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.

பாஜக 40 தொகுதிகள் கேட்பதாகவும் அதிமுக அதற்கு மறுப்பு தெரிவிப்பதாகவும் அதிமுக வட்டாரங்களில் கூறப்படுகிறது.மேலும் எடப்பாடி பழனிசாமிதான் அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் என்பதையும் பாஜக இன்னும் ஏற்கவில்லை. இந்த நிலையில்தான் கேபி முனுசாமி இரண்டு வாரங்களில் இரண்டாவது முறையாக பாஜக மீது தாக்குதல் நடத்தியிருக்கிறார்.

இதுபற்றி பத்திரிகையாளர் ஷ்யாம் தொலைக்காட்சியில் கருத்துப் பகிரும்போது, “எப்போதுமே தலைவர்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படையாக உடைத்துப் பேசுவதற்கு சிலரை வைத்திருப்பார்கள். ஜெயலலிதா காலத்தில் அவரது கருத்துகளை காளிமுத்து மூலமாக வெளிப்படுத்துவார். இப்போது எடப்பாடி பழனிசாமி தனது கருத்தை கே.பி.முனுசாமி மூலமாக வெளிப்படுத்துகிறார். ஒருவேளை சுமுக நிலை ஏற்பட்டுவிட்டால் கேபி முனுசாமி பேசியது சொந்தக் கருத்து என்று சொல்லிவிடலாம்”என்று கூறினார்.

-வேந்தன்

ஆளுநராக பன்னீர்: பாஜகவின் புது பஞ்சாயத்து!

6 நிமிட வாசிப்பு

ஆளுநராக பன்னீர்:  பாஜகவின் புது பஞ்சாயத்து!

பெஞ்சமின் மீது எடப்பாடி எரிந்துவிழுந்த பின்னணி!

4 நிமிட வாசிப்பு

பெஞ்சமின் மீது எடப்பாடி எரிந்துவிழுந்த பின்னணி!

மீண்டும் அரசியலுக்கு வரும் தமிழிசை?

3 நிமிட வாசிப்பு

மீண்டும் அரசியலுக்கு வரும் தமிழிசை?

சனி 9 ஜன 2021