மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 9 ஜன 2021

எடப்பாடிதான் முதல்வர் வேட்பாளர்: மீண்டும் உறுதி செய்த பொதுக்குழு!

எடப்பாடிதான் முதல்வர் வேட்பாளர்: மீண்டும் உறுதி செய்த பொதுக்குழு!

ஜனவரி 9 ஆம் தேதி கூடிய அதிமுகவின் பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

வழக்கமாக பொதுக்குழுவின் தீர்மானங்கள் எல்லாம் அடர்த்தியாக விரிவாக அமைந்திருக்கும். ஆனால் அதிமுகவின் இந்தப் பொதுக்குழுத் தீர்மானங்கள் எல்லாம் நான்கைந்து வரிகளுக்குள்ளேயே முடிந்துவிடுகின்றன.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் தமிழக அரசுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்து முதல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இரண்டாவது தீர்மானம்தான் இந்தப் பொதுக்குழுவின் செய்தியாக அமைந்திருக்கிறது.

“ கழக ஒருங்கிணைப்பாளர் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் 2021 சட்டமன்றப் பொதுத் தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை அறிவித்துள்ளதை ஏகமனதாக ஏற்கிறோம். வெற்றி வாகை சூட கடுமையாக உழைக்கிறோம்” என்று அந்தத் தீர்மானம் உரைக்கிறது. எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு மூன்று மாதங்கள் முடிந்துவிட்ட நிலையிலும், பாஜக, பாமக, தேமுதிக கூட்டணிக் கட்சிகள் இதை இன்னும் ஏற்றுக்கொள்வதாக அறிவிக்காத நிலையில்...எடப்பாடிதான் முதல்வர் வேட்பாளர் என்பதை மீண்டும் உறுதி செய்திருக்கிறது பொதுக்குழு.

கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று அறிவித்த தமிழக முதல்வருக்கும், மத்திய அரசுக்கும் நன்றி தெரிவித்து மூன்றாவது தீர்மானம் இயற்றப்பட்ட நிலையில் நான்காவது தீர்மானம் இலங்கைத் தமிழர்கள் பற்றி அமைந்துள்ளது.

“இலங்கையில் தமிழர்களுக்கு சுய நிர்ணய உரிமையை வழங்கவும் அதிகாரப் பரவலுக்கு அடித்தளமிடவும் இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் கூறப்பட்டதுமான மாகாண கவுன்சில் முறை ரத்து செய்யப்படுவதைத் தடுக்க இந்திய அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மினி கிளினிக், குடிசை இல்லா தமிழகம், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5சதவிகித இட ஒதுக்கீடு, 2500 ரூபாய் பொங்கல் பரிசு, உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்றிய தமிழக அரசுக்கு பாராட்டுத் தெரிவித்து சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மேலும் 14 ஆவது தீர்மானம் திமுக தலைவர் ஸ்டாலினுக்காக நிறைவேற்றப்பட்டுள்ளது.

“ முதல்வரின் நிர்வாகத் திறமைக்கு மக்கள் மத்தியில் பெருகி வரும் ஆதரவைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் பக்குவமோ பண்பாடோ இன்றி விமர்சித்து வரும் திமுக தலைவருக்கும், அவருடைய கட்சியினருக்கும் கண்டனம்”என்கிறது இத்தீர்மானம்.

15 ஆவது தீர்மானமாக, “ 2021 சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கான வெற்றிவியூகம் வகுக்கவும் கூட்டணிக் கட்சிகளையும் தொகுதிப் பங்கீட்டையும் முடிவு செய்யவும் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வத்துக்கும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் முழு அதிகாரம்” வழங்கி இயற்றப்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழுவின் 16 ஆவதும் கடைசியுமான தீர்மானம், “தமிழ்நாட்டில் தீய சக்திகள் தலை தூக்குவதை முறியடித்து ஒரே குடும்பத்தின் ஏக போக வாரிசு அரசியலை வீழ்த்தி அண்ணாவும் எம்ஜிஆரும் கனவு கண்டவாறு உண்மை ஜனநாயகம் தழைக்க உழைப்போம்” என்கிறது. இந்த எல்லா தீர்மானங்களும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டன.

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்  ...

5 நிமிட வாசிப்பு

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்   

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்: அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா? ...

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்:  அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா?

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி! ...

2 நிமிட வாசிப்பு

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி!

சனி 9 ஜன 2021