மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 9 ஜன 2021

அதிமுக பொதுக்குழு! மேடை பதாகை சொல்லும் செய்தி!

அதிமுக  பொதுக்குழு! மேடை பதாகை சொல்லும் செய்தி!

அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று (ஜனவரி 9) காலை 11 மணியளவில் சென்னையை அடுத்த வானகரத்தில் தொடங்கியிருக்கிறது.

காலை 8.50 மணிக்குத் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. பொதுக்குழு உறுப்பினர்கள் முன்னதாகவே வந்து அமர்வதற்கு வசதியாக இந்த நேரம் அறிவிக்கப்பட்டாலும் கட்சி நிர்வாகிகள் பத்து மணிக்கு மேல்தான் வர ஆரம்பித்தனர்.

ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் 11 மணிக்கு பொதுக்குழு நடக்கும் இடத்துக்கு வந்துவிட்டார். ஆனால் அவருக்குப் பின்னர்தான் முதல்வரும் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி வந்தார். அதன் பின் காலை 11. 15 மணிக்கு பொதுக்குழுக் கூட்டம் தொடங்கியது.

மேடையில் அவைத் தலைவர், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர்கள் இருவர் உள்ளிட்ட ஒன்பது நாற்காலிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. நடு நடு நாயகமாக அவைத் தலைவர் அமர்ந்திருக்க, அவரது வலது பக்கம் ஓ.பன்னீர் செல்வமும் இடது பக்கம் எடப்பாடி பழனிசாமியும் அமர்ந்திருக்கிறார்கள்.

பொதுக்குழு மேடையில் அமைக்கப்பட்டிருக்கிற பதாகையில் இருபக்கமும் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். ஆகியோர் நிற்பது போன்ற உருவப் படமும் ஜெ. பக்கத்தில் ஓ.பன்னீர் செல்வம்- எம்.ஜி.ஆர். பக்கத்தில் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் உருவப் படங்கள் சரி சமமான அளவில் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதை அதிமுகவினர் சுட்டிக் காட்டி தங்களுக்குள் சில ஒப்புமைகளை பேசிக் கொண்டிருந்தனர்.

எம்.ஜி.ஆர். ஜெயலலிதா உருவப் படங்களுக்கு மரியாதை செலுத்தியதைத் தொடர்ந்து அதிமுகவின் பொதுக்குழு தொடங்கியுள்ளது.

-வேந்தன்

கொடநாடு வழக்கு: சேலத்தில் ஒருவர் கைது!

5 நிமிட வாசிப்பு

கொடநாடு வழக்கு: சேலத்தில் ஒருவர் கைது!

பன்னீர் பின்னால் திமுக: சிவி சண்முகம்

4 நிமிட வாசிப்பு

பன்னீர் பின்னால் திமுக: சிவி சண்முகம்

மகாராஷ்டிரா: ஆளுநருடன் பாஜக பட்னவிஸ் சந்திப்பு- அடுத்த ஆட்சிக்கு ...

3 நிமிட வாசிப்பு

மகாராஷ்டிரா: ஆளுநருடன் பாஜக பட்னவிஸ் சந்திப்பு- அடுத்த ஆட்சிக்கு ஆயத்தம்! 

சனி 9 ஜன 2021