மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 8 ஜன 2021

திமுகவில் புதிய அணி: டி.ஆர்.பாலு மகனுக்கு செயலாளர் பதவி!

திமுகவில் புதிய அணி: டி.ஆர்.பாலு மகனுக்கு செயலாளர் பதவி!

திமுகவில் வெளிநாடு வாழ் இந்தியர் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.

திமுகவில் இளைஞரணி, மகளிரணி, தொண்டரணி, மாணவரணி, விவசாய அணி என ஒட்டுமொத்தமாக 19 துணை அமைப்புகள் உள்ளன. 2017ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப அணி உருவாக்கப்பட்டு அதன் மாநிலச் செயலாளராக பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் நியமிக்கப்பட்டார்.

ஹைட்ரோகார்பன், மீத்தேன், நியூட்ரினோ, எட்டுவழிச் சாலை என சுற்றுச் சூழலுக்கு எதிரான பல திட்டங்களுக்கு மக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், சுற்றுச் சூழலுக்காக புதிய அணியை சமீபத்தில் உருவாக்கியது திமுக. அதன் செயலாளராக கார்த்திகேயன் சிவசேனாபதி நியமிக்கப்பட்டார்.

வெளிநாட்டில் தங்கி பணிபுரியும் பலரும் திமுகவிற்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். வெளிநாட்டில் இருப்பவர்கள் அங்கும் திமுகவின் கிளைகளை அமைத்து நிகழ்வுகளை நடத்துகின்றனர். இந்த நிலையில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் நல அணி என்ற புதிய அமைப்பை திமுக உருவாக்கியுள்ளது.

இதுதொடர்பாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், “திமுக சட்டதிட்ட விதி: 6, பிரிவு: 2-ன் அடிப்படையில் வெளிநாடு வாழ் இந்தியர்களை திமுக உறுப்பினராக இணைப்பதற்கும் ஒவ்வொரு நாட்டிலும், திமுக அமைப்புகளை உருவாக்குவதற்கும், முறைப்படுத்துவதற்கும் திமுக சட்டதிட்ட விதி 31 - பிரிவு: 20-ன் கீழ், வெளிநாடு வாழ் இந்தியர் (என்.ஆர்.ஐ) நல அணி என்ற புதிய அணி அமைக்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

அணியின் செயலாளராக மன்னார்குடி எம்.எல்.ஏ டி.ஆர்.பி.ராஜா, இணைச் செயலாளர்களாக தருமபுரி மக்களவை உறுப்பினர் செந்தில்குமார், புதுக்கோட்டை எம்.எம்.அப்துல்லா ஆகியோர் தலைமைக் கழகத்தால் நியமிக்கப்படுவதாகவும் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.இவர்களில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மகன் டி.ஆர்.பி.ராஜா என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தல்களில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தபால் மூலம் வாக்களிக்கும் நடைமுறையை செயல்படுத்த தேர்தல் ஆணையம் தயாராகி வரும் நிலையில், இவ்வாறு புதிய அணியை திமுக உருவாக்கியுள்ளது.

ஸ்டாலின் ஆபரேஷன் சக்சஸ்: உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் ...

8 நிமிட வாசிப்பு

ஸ்டாலின் ஆபரேஷன் சக்சஸ்:  உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டி -  எம்.பி. தேர்தலில் திமுக கூட்டணி!

எம்.எல்.ஏ.வாக ஆகியிருக்கலாமோ? ஏக்கத்தை வெளிப்படுத்திய கனிமொழி! ...

4 நிமிட வாசிப்பு

எம்.எல்.ஏ.வாக ஆகியிருக்கலாமோ?  ஏக்கத்தை வெளிப்படுத்திய கனிமொழி!

ராஜ்யசபா: காங்கிரசுக்கு திமுக கதவு சாத்திய பின்னணி!

3 நிமிட வாசிப்பு

ராஜ்யசபா:  காங்கிரசுக்கு திமுக கதவு சாத்திய பின்னணி!

வெள்ளி 8 ஜன 2021