மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 8 ஜன 2021

கூட்டணி: பாமகவை இழுக்க தினகரன் முயற்சி!

கூட்டணி: பாமகவை இழுக்க தினகரன் முயற்சி!

அதிமுக, திமுகவுடன் ஒருபோதும் கூட்டணி இல்லை என்று அறிவித்த பாமக, மக்களவைத் தேர்தலின்போது அதில் சமரசம் செய்துகொண்டு அதிமுக கூட்டணியில் இணைந்தது. போட்டியிட்ட 7 இடங்களிலும் தோல்வியைத் தழுவினாலும், ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி அதிமுக உறுப்பினர்களின் ஆதரவுடன் மாநிலங்களவை உறுப்பினராக பொறுப்பேற்றார் அன்புமணி.

சட்டமன்றத் தேர்தல் வரும் நேரத்தில், கடந்த டிசம்பர் 1ஆம் தேதி வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டுமென கோரிக்கையை முன்னிறுத்தி போராட ஆரம்பித்தது பாமக. கூட்டணியில் இருப்பதால் பாமகவின் கோரிக்கைக்கு செவிசாய்க்கும் விதமாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஆணையம் அமைக்க உத்தரவிட்டது அதிமுக அரசு. ஆனால், இதனை காலம் தாழ்த்தும் உத்தி என விமர்சித்தார் ராமதாஸ்.

அமைச்சர்கள் தங்கமணி, கே.பி.அன்பழகன் ஆகியோர் ராமதாஸை சென்று சந்தித்து கூட்டணி தொடர்பாக பேச முயன்றபோதும் சரியான ரெஸ்பான்ஸ் எதுவும் இல்லை. அதுபோலவே முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை பாமக இன்னும் ஏற்கவே இல்லை.

இந்த நிலையில் அமமுக தரப்பில் தேர்தலுக்கான பணிகளில் தீவிரமாக கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டனர். இதுதொடர்பாக அமமுக தரப்பில் விசாரித்தோம்...

சட்டமன்றத் தேர்தலில் வலுவான கூட்டணியை அமைக்க பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். கூட்டணி பற்றி பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ஆனால் கூட்டணி அமைப்போம் என்றோ, கூட்டணி வேண்டாம் என்றோ உறுதியான தகவல்கள் எதுவும் தினகரனுக்கு பாமகவிடம் இருந்து சொல்லப்படவில்லை. தேர்தலுக்குத்தான் இன்னும் நேரம் இருக்கிறதே...அப்போது பார்த்துக்கொள்வோம் என்றே சொல்லி வருகிறதாம்.

இதுதொடர்பாக வட மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளிடம் பேசிய தினகரன், ‘அதிமுகவுடன் பாமகவுக்கு சுமூகமான உறவு இப்போது இல்லை. அதனால் பாமகவுடன் கூட்டணி அமைப்பது பற்றி பேசிக்கொண்டிருக்கிறேன். நம்முடன் பாமக கூட்டணிக்கு வந்துவிடுவார்கள்’ என்று சொல்லிவருகிறார் என்கிறார்கள்.

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன் ...

10 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மீண்டும் எட்டு வழிச் சாலை! காய் நகர்த்தும் கட்கரி

10 நிமிட வாசிப்பு

மீண்டும் எட்டு வழிச் சாலை!  காய் நகர்த்தும் கட்கரி

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

வெள்ளி 8 ஜன 2021