மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 8 ஜன 2021

ஸ்டாலின் வருகிறார்: புதிய ஏற்பாடுகள்!

ஸ்டாலின் வருகிறார்: புதிய ஏற்பாடுகள்!

சட்டமன்றத் தேர்தலுக்கான நேரடி பிரச்சாரத்தை ஆரம்பிக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின்.

சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை திமுக கடந்த நவம்பர் மாதமே துவங்கிவிட்டது. முதலாவதாக தேர்தல் அறிக்கை தயாரிப்புக்காக குழு அமைக்கப்பட்டு, அக்குழு ஒவ்வொரு மாவட்டத்திலும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மக்களின் கருத்துக்களைக் கேட்டு வருகிறது.

அதன்பிறகு விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில், கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தமிழகம் முழுக்க வலம் வந்து மக்களை நேரில் சந்தித்து பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள். கொரோனா காலத்தில் இணைய வழி உரையாடல்களை அதிகம் மேற்கொண்டது திமுகதான். தமிழகத்தை மீட்டெடுப்போம் என்ற தலைப்பில் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தையும் ஸ்டாலின் காணொலி வழியிலாகவே முன்னெடுத்தார்.

2019 மக்களவைத் தேர்தலின்போது பிரச்சாரத்திற்கு முன்பாக ஊராட்சி சபைக் கூட்டம் என்ற பெயரில் மக்களை சந்தித்தார் ஸ்டாலின். இது அத்தேர்தலில் திமுக கூட்டணி வெற்றிபெற முக்கிய காரணமாக அமைந்தது. அதேபோலவே தற்போது, மக்கள் கிராம சபை என்ற பெயரில் பிரச்சாரக் கூட்டங்களை திமுக தலைவர் ஸ்டாலின் முதல் ஒன்றிய அளவிலான நிர்வாகிகள் வரை நடத்தி வருகிறார்கள். முதல்வர் மற்றும் அமைச்சர்களின் தொகுதிகளை குறிவைத்து அவர்களை தோற்கடிக்க வேண்டும் என்கிற முழக்கத்துடன் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார் ஸ்டாலின்.

ஏற்கனவே திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு பேட்டியளித்தபோது ஜனவரி இரண்டாவது வாரத்தில் ஸ்டாலின் நேரடி பிரச்சாரத்தில் ஈடுபடுவார் எனத் தெரிவித்தார். இந்த நிலையில் பொங்கலுக்குப் பிறகு ஸ்டாலின் தனது நேரடி பிரச்சாரத்தை துவங்குகிறார். ஸ்டாலின் பிரச்சாரத்தை திட்டமிடும் பணிகளை ஐ-பேக் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

ஒவ்வொரு நிகழ்வுக்கும் மக்களை ஈர்க்கும் வகையிலான பெயர்கள் வைக்கப்பட்டு வருகின்றன. கடந்த சட்டமன்றத் தேர்தலில் நமக்கு நாமே, முடியட்டும் விடியட்டும் என்ற தலைப்புகளில் தமிழகத்தை வலம் வந்தார் ஸ்டாலின். அதேபோல இப்போதைய பிரச்சாரத்துக்கு வருகிறார் ஸ்டாலின் என்ற தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள் திமுக வட்டாரங்களில்.

ஸ்டாலின் ஆபரேஷன் சக்சஸ்: உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் ...

8 நிமிட வாசிப்பு

ஸ்டாலின் ஆபரேஷன் சக்சஸ்:  உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டி -  எம்.பி. தேர்தலில் திமுக கூட்டணி!

எம்.எல்.ஏ.வாக ஆகியிருக்கலாமோ? ஏக்கத்தை வெளிப்படுத்திய கனிமொழி! ...

4 நிமிட வாசிப்பு

எம்.எல்.ஏ.வாக ஆகியிருக்கலாமோ?  ஏக்கத்தை வெளிப்படுத்திய கனிமொழி!

ராஜ்யசபா: காங்கிரசுக்கு திமுக கதவு சாத்திய பின்னணி!

3 நிமிட வாசிப்பு

ராஜ்யசபா:  காங்கிரசுக்கு திமுக கதவு சாத்திய பின்னணி!

வெள்ளி 8 ஜன 2021