மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 7 ஜன 2021

ஊழல் குற்றச்சாட்டு: ஸ்டாலினை விவாதத்துக்கு அழைக்கும் எடப்பாடி

ஊழல் குற்றச்சாட்டு: ஸ்டாலினை விவாதத்துக்கு அழைக்கும் எடப்பாடி

ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து எந்த இடத்திலும் விவாதிக்கத் தயாராக இருப்பதாக ஸ்டாலினுக்கு முதல்வர் சவால் விடுத்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வெற்றிநடை போடும் தமிழகம் என்ற தலைப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று ஈரோடு மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். திமுக சார்பில் நடத்தப்படும் கிராம சபை கூட்டங்கள் மூலம் மக்களுக்கு எந்த பயனும் இல்லை என்று அவர் குற்றம்சாட்டினார்.

முதல்வர் வேட்பாளர் பிரச்சினையை முன்வைத்து பன்னீர்செல்வம் அதிமுகவிலிருந்து பிரிவார், அதிமுக இரண்டாக உடையும் என ஸ்டாலின் பேசியதற்கு பிரச்சாரத்தில் பதிலளித்தார் முதல்வர். “அதிமுக உடையும் என்று சொன்னீர்களே... இப்போது என்ன நடக்கிறது. மு.க.அழகிரி கட்சி ஆரம்பிக்கிறேன் என்று கூறியுள்ளார். எந்தக் காலத்துக்கும் அதிமுக உடையாது. திமுக உடையாமல் இருப்பதற்கு வேண்டுமானால் வழிபார்த்துக்கொள்ளுங்கள்” என ஸ்டாலினுக்கு அவர் அறிவுறுத்தினார்.

சாதிச் சண்டை, மதச் சண்டைகள் இன்றி தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்வதாகத் தெரிவித்த முதல்வர், பொய்களை அள்ளி வீசி குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிப்பதையே ஸ்டாலின் நோக்கமாகக் கொண்டுள்ளார் என குற்றம்சாட்டினார் முதல்வர்.

முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது ஆளுநரிடம் ஸ்டாலின் ஊழல் புகார் அளித்துள்ளது தொடர்பாக அந்தியூரில் பதிலளித்துப் பேசிய முதல்வர், “ஊழல் எங்கு நடந்துள்ளது. ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விவாதத்துக்கு நான் தயாராக இருக்கிறேன். ஸ்டாலின் துண்டு சீட்டு எதுவும் இல்லாமல் விவாதத்தில் கலந்துகொள்ள வேண்டும்” என சவால் விடுத்தார்.

நாட்டிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக தலைமையிலான ஆட்சிதான் என விவரித்தவர், அரிசி ஊழல், வீராணம் ஊழல் என திமுக ஊழலில் ஈடுபட்டதாகவும் 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் உலகையே உலுக்கியது எனவும் குறிப்பிட்டார். இவர்கள்தான் தற்போது அதிமுக அரசு மீது குற்றம்சாட்டுவதாகவும் கூறினார்.

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

வியாழன் 7 ஜன 2021