மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 7 ஜன 2021

உதயநிதிக்கு நோட்டீஸ் அனுப்பிய சசிகலா தம்பி மகன்

உதயநிதிக்கு நோட்டீஸ் அனுப்பிய சசிகலா தம்பி மகன்

சசிகலாவை அவதூறாகப் பேசிய உதயநிதி மன்னிப்பு கேட்க வேண்டுமென ஜெயானந்த் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

திமுகவின் இளைஞரணிச் செயலாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் அரங்க பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பங்குபெற்றார். அதில் பேசும்போது, “மோடிக்கு எடுபிடியாக இருப்பதால் எடப்பாடி ஆட்சியை எடுபிடி ஆட்சி எனக் கூறுகிறோம். டெட்பாடி ஆட்சி என்கிறார்கள். சசிகலா கால்ல அப்படி தானே விழுந்து கெடந்தாரு. டேபிள், சேர்குள்ளலாம் புகுந்து விழுந்து கெடந்தாரு’ என்றதோடு அவதூறான வார்த்தை ஒன்றையும் தெரிவித்து சிரித்தார்.

இதனைக் கேட்டு நிகழ்வில் பங்கு பெற்றிருந்த கட்சி நிர்வாகிகளும் சிரித்தனர். 36 விநாடிகள் மட்டும் ஓடக்கூடிய இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், உதயநிதிக்கு எதிராக கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

இந்த நிலையில் சசிகலாவின் தம்பி மகனும், அண்ணா திராவிடர் கழகத்தின் இளைஞரணிச் செயலாளருமான ஜெயானந்த் திவாகரன், உதயநிதி ஸ்டாலினுக்கு இன்று (ஜனவரி 7) வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், சசிகலாவுக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் அநாகரீகமான வார்த்தைகளை உதயநிதி பயன்படுத்தியது மிகவும் கண்டனத்திற்குரியது. அரசியலில் 35 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த ஒரு தலைவர் சசிகலா. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் இணைந்து பணியாற்றி அவர் பல அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களை உருவாக்கியுள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

“சசிகலாவின் அரசியல் வாழ்க்கை காலம்தான் உதயநிதியின் வயது. பொதுவெளியில் சசிகலாவைப் பற்றி பேசியது அவரின் ஆணாதிக்க மனநிலையையும், பெண்களுக்கு மரியாதை அளிக்காதவர் என்பதையும் காட்டுகிறது” என்று விமர்சித்ததோடு,

இந்த நோட்டீஸ் கிடைக்கப் பெற்றவுடன் உதயநிதி தனது அவதூறு கருத்தை வாபஸ் பெற்றுக்கொண்டு நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும். இல்லையெனில் அதன்பிறகு எடுக்கப்படும் சிவில் மற்றும் கிரிமினல் சட்ட நடவடிக்கைகளுக்கு ஆளாக வேண்டியது இருக்கும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொடநாடு வழக்கு: சேலத்தில் ஒருவர் கைது!

5 நிமிட வாசிப்பு

கொடநாடு வழக்கு: சேலத்தில் ஒருவர் கைது!

பன்னீர் பின்னால் திமுக: சிவி சண்முகம்

4 நிமிட வாசிப்பு

பன்னீர் பின்னால் திமுக: சிவி சண்முகம்

மகாராஷ்டிரா: ஆளுநருடன் பாஜக பட்னவிஸ் சந்திப்பு- அடுத்த ஆட்சிக்கு ...

3 நிமிட வாசிப்பு

மகாராஷ்டிரா: ஆளுநருடன் பாஜக பட்னவிஸ் சந்திப்பு- அடுத்த ஆட்சிக்கு ஆயத்தம்! 

வியாழன் 7 ஜன 2021