மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 7 ஜன 2021

ரஜினிக்கு எதிராக போராட நிதி வசூலித்த ரசிகர்கள்: மன்ற நிர்வாகி!

ரஜினிக்கு எதிராக போராட நிதி வசூலித்த ரசிகர்கள்: மன்ற நிர்வாகி!

ரஜினி ரசிகர்கள் போராட்டத்துக்கு நிதி வசூல் செய்ததாக கூறியது ஏன் என மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் விளக்கம் அளித்தார்.

நடிகர் ரஜினிகாந்த் சிறுநீரக அறுவை சிகிச்சை செய்துகொண்டதன் காரணமாக உடல்நிலையைக் காரணம் காட்டி அரசியலுக்கு வரமாட்டேன், கட்சி தொடங்கமாட்டேன் என்று அறிவித்துவிட்டார். ஆனாலும், ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டுமென அவரது ரசிகர்கள் வற்புறுத்தி வருகிறார்கள். ரஜினி இல்லத்தின் முன்பு காத்திருப்பு போராட்டங்களும் நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் தான் கைப்பட எழுதிய ஒரு அறிக்கையை நேற்று வெளியிட்டார் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர். ரஜினியை அரசியலில் ஈடுபடச் சொல்லி கட்டாயப்படுத்துவதற்காக போராட்டங்களில் ஈடுபடப் போவதாக சில ரசிகர்கள் பேசிவருவது அவரை மேலும் நோகடிக்கச் செய்யும் செயல். போராட்டத்திற்கான செலவுக்கென்று கூறி நிதி வசூல் செய்வதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. இது மிகவும் வருந்தத்தக்கது என்று குறிப்பிட்டார் சுதாகரன். ரஜினி மீது அன்பும் அவர் நலனில் அக்கறையும் கொண்ட மன்றத்தினரும் ரசிகர்களும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் எனவும் அவர் வலியுறுத்தினார்.

அதாவது, நிதி வசூல் செய்வதற்காகவே போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளார்கள் என்பது போன்ற தோற்றத்தை இந்த அறிக்கை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தனது அறிக்கை தொடர்பாக விளக்கம் அளித்து இன்று (ஜனவரி 7) இன்னொரு அறிக்கையை வெளியிட்டுள்ளார் சுதாகர். அதில், “அறவழிப் போராட்டத்திற்காக சிலர் நிதி வசூல் செய்வதாக எனக்கு வந்த செய்தியை அறிக்கையில் தெரிவித்திருந்தேன். அது ரசிகர்கள் அனைவரையும் சொல்வது போல ஒரு சிலர் திசை திருப்புகிறார்கள். அப்படி யாராவது எண்ணியிருந்து அதனால் மனம் புண்பட்டிருந்தால் அதற்காக நான் வருந்துகிறேன்” என்று கூறியுள்ளார் சுதாகர்.

கொடநாடு வழக்கு: சேலத்தில் ஒருவர் கைது!

5 நிமிட வாசிப்பு

கொடநாடு வழக்கு: சேலத்தில் ஒருவர் கைது!

பன்னீர் பின்னால் திமுக: சிவி சண்முகம்

4 நிமிட வாசிப்பு

பன்னீர் பின்னால் திமுக: சிவி சண்முகம்

மகாராஷ்டிரா: ஆளுநருடன் பாஜக பட்னவிஸ் சந்திப்பு- அடுத்த ஆட்சிக்கு ...

3 நிமிட வாசிப்பு

மகாராஷ்டிரா: ஆளுநருடன் பாஜக பட்னவிஸ் சந்திப்பு- அடுத்த ஆட்சிக்கு ஆயத்தம்! 

வியாழன் 7 ஜன 2021