மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 7 ஜன 2021

ஸ்டாலினின் வானவில் புரட்சி: தேர்தல் அறிக்கையின் ஏழு வாக்குறுதிகள்!

ஸ்டாலினின் வானவில் புரட்சி:  தேர்தல் அறிக்கையின் ஏழு வாக்குறுதிகள்!

வருகிற சட்டமன்றத் தேர்தலை ஒட்டி திமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக கடந்த அக்டோபர் மாதம் தலைமையால் ஒரு குழு அமைக்கப்பட்டது.

இக்குழுவில் கட்சியின் பொருளாளர் . டி.ஆர். பாலு, துணைப் பொதுச் செயலாளர்களான சுப்புலட்சுமி ஜெகதீசன் , . ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ் , மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்பி, கொள்கைப் பரப்புச் செயலாளரான . திருச்சி சிவா எம்பி, செய்தித் தொடர்புத் துறைச் செயலாளர் . டி.கே.எஸ். இளங்கோவன், எம்.பி, .பேராசிரியர் அ.ராமசாமி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இந்தக் குழு தமிழகம் முழுதும் பல மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் செய்து பல்வேறு தரப்பு மக்களையும், பல்வேறு தொழில் செய்பவர்களையும் சந்தித்து அவர்களின் பிரச்சினைகள், கோரிக்கைகள் ஆகியவற்றைக் கேட்டறிந்தனர். இதன் அடிப்படையில் திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு தேர்தலிலும் திமுகவின் தேர்தல் அறிக்கை மக்களால் மட்டுமல்ல, சக அரசியல் கட்சிகளாலும் உற்று நோக்கப்படும். அந்த அளவுக்கு திமுகவின் தேர்தல் அறிக்கையில் கவர்ச்சிகரமான திட்டங்கள் இருக்கும். இதனால்தான் மறைந்த திமுக தலைவர் கலைஞர், ‘தேர்தல் அறிக்கைதான் எங்கள் கதாநாயகன்’ என்று குறிப்பிடுவார்.

அந்த வகையில் 2021 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுகவின் கதாநாயகன் என்னென்ன சிறப்பு அம்சங்களைப் பெற்றிருக்கிறார் என்று திமுக வட்டாரத்தில் விசாரித்தபோது சில சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்தன.

“இந்த முறை தமிழ்நாட்டின் ஒவ்வொரு பிரிவு மக்களையும் கவரும்படி தேர்தல் அறிக்கை இருக்க வேண்டும் என்று கட்சித் தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். மக்களின் கோரிக்கை, அதற்கான பொருளாதார சாத்தியம் ஆகியவற்றின் அடிப்படையில் ஏழு வாக்குறுதிகள் தயார் செய்யப்பட்டிருக்கின்றன. இதற்கு வானவில் புரட்சி என்று இப்போதைக்குத் தலைப்பிடப்பட்டுள்ளது. அவை,,,,

1. இல்லத்தரசிகளுக்கு (house wife) மாதம் இரண்டாயிரம் ரூபாய் சிறப்பூதியம்

2. விவசாயிகளின் கூட்டுறவு வங்கிக் கடன் தள்ளுபடி

3. மாணவர்கள் கல்விக் கடன் ரத்து செய்யப்படும்

4. மீனவர்களுக்கு ‘கலைஞர் கவசம்’ என்ற பெயரில் சிறப்புத் திட்டம்

5.அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாதம் தோறும் கருணைத் தொகை

6. ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிற படித்த இளைஞர்கள், இளம்பெண்களுக்கு வேலை...வேலை கிடைக்கும் வரை ஐரோப்பிய நாடுகளைப் போல ஊக்கத் தொகை

7. மாவட்டத் தலைநகரங்கள், இரண்டாம் நிலை நகரங்கள் உள்ளிட்ட அனைத்து நகரங்களும் மெட்ரோ நகரங்களுக்கு இணையான உள்கட்டமைப்பு வளர்ச்சி

ஆகிய இந்த ஏழு வாக்குறுதிகளை முன் வைத்துதான் ஏழு வண்ணங்கள் கொண்ட வானவில் போல, ஏழு வாக்குறுதிகளை அடிப்படையாகக் கொண்ட வானவில் புரட்சியாக திமுகவின் தேர்தல் அறிக்கை இருக்கும்” என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில்.

-வேந்தன்

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்  ...

5 நிமிட வாசிப்பு

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்   

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்: அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா? ...

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்:  அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா?

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி! ...

2 நிமிட வாசிப்பு

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி!

வியாழன் 7 ஜன 2021