மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 7 ஜன 2021

அமித் ஷாவின் சென்னை வருகை ரத்து!

அமித் ஷாவின் சென்னை வருகை ரத்து!

அமித் ஷாவின் சென்னை வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாஜகவைச் சேர்ந்த தேசிய அளவிலான முக்கிய தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் அடிக்கடி தமிழகத்துக்கு வருகை தருகின்றனர். கொரோனா காரணமாக அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சூழலில், அரசு விழாவில் பங்கேற்க நவம்பர் 23ஆம் தேதி சென்னை வந்தார் உள் துறை அமைச்சரும், பாஜகவின் முக்கிய தலைவருமான அமித் ஷா.

அவருக்கு அதிமுக மற்றும் பாஜகவைச் சேர்ந்தவர்கள் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என ஓபிஎஸ் அறிவித்தார். இந்த நிலையில் வரும் ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் தினத்தன்று நடைபெறும் துக்ளக் ஆண்டு விழா நிகழ்ச்சிக்கு தமிழகம் வர இருந்தார் அமித் ஷா.

அப்போது அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படும் எனவும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை அறிவிப்பார் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. அத்துடன், நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து உடல்நலம் விசாரிக்கவும் அமித் ஷா திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்தன.

இந்த நிலையில் அமித் ஷாவின் தமிழக வருகை ரத்துசெய்யப்பட்டுள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பாஜக தேசியத் தலைவர் நட்டா தமிழகம் வருவதாக அறிவிக்கப்பட்டு, அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

வியாழன் 7 ஜன 2021