மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 4 ஜன 2021

திருக்குறளை எழுதியது ஒளவையாரா? மீண்டும் சர்ச்சையில் அமைச்சர்

திருக்குறளை எழுதியது ஒளவையாரா? மீண்டும் சர்ச்சையில் அமைச்சர்

திருக்குறளை எழுதியது ஒளவையார் எனக் கூறி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.

ஜெயலலிதா இருந்தபோது பெயரே தெரியாத அளவுக்கு அமைதியாக இருந்த அமைச்சர்கள், அதன் பிறகு தங்களது சர்ச்சை பேச்சுகள் மூலம் ஊடகங்களுக்கும், சமூக வலைதளங்களுக்கும் தீனிபோட்டு வருகின்றனர். இவர்களில் சர்ச்சையையும் இவரையும் பிரிக்க முடியாது என்ற அளவுக்கு மிகவும் முக்கியமானவர் மூத்த அமைச்சரான திண்டுக்கல் சீனிவாசன்.

அப்போலோவில் அம்மா இட்லி சாப்பிட்டார் என நாங்கள் பொய் சொன்னோம் என்று இவர் பேசியது முதன்முதலாக சர்ச்சையானது. அதன் பிறகு இவர் எங்கு பேசினாலும் அங்கு மீடியாக்கள் குவிய ஆரம்பித்துவிட்டன. அம்மா கொள்ளையடிச்ச பணத்தை தினகரன் செலவு பண்ணிக்கிட்டு இருக்காரு என்பது முதற்கொண்டு கடைசியாக இயேசுநாதனை கோட்சே சுட்டுக்கொன்றார் என கடந்த வாரம் வரை இவர் பேசியது பலவும் சர்ச்சை ரகம்தான்.

இந்த நிலையில் மீண்டும் ஒருமுறை தன்னுடைய பேச்சின் மூலமாக சர்ச்சைக்கு வித்திட்டுள்ளார் திண்டுக்கல் சீனிவாசன். திண்டுக்கல்லில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அமைச்சர், ‘நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை’ என்ற திருக்குறளைச் சுட்டிக்காட்டி, அரசர்களை நம்பி ஒளவையார் இந்தப் பாடலை பாடியதாகக் குறிப்பிட்டார்.

அமைச்சர் தவறாகச் சொல்லிவிட்டதை உணர்ந்த மேடையில் இருந்த நிர்வாகிகள், திருவள்ளுவர் எழுதியதாக எடுத்துக் கூறினர். அதனை ஒப்புக்கொள்ளாமல் ஒளவையார், திருவள்ளுவர் ரெண்டு பேருமே சொல்லியிருக்காங்க. அதனால் ஒன்னும் தப்பில்லை என்று திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.

அதன் பிறகு யாரு எழுதுனா என்ன, நம்ம கருத்து சரியா இருக்கான்னுதான் பார்க்கணும் என்று ஒருவாறாக ஒப்புக்கொண்டு மழையைப் பற்றிய தன்னுடைய பேச்சைத் தொடர்ந்தார். அமைச்சரின் இந்தப் பேச்சும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக மாறியுள்ளது.

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

திங்கள் 4 ஜன 2021