மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 4 ஜன 2021

எடப்பாடி விளம்பரத்திற்கு மக்கள் பணமா? ஸ்டாலின்

எடப்பாடி விளம்பரத்திற்கு மக்கள் பணமா? ஸ்டாலின்

தனிப்பட்ட விளம்பரத்திற்காக மக்கள் பணத்தை செலவு செய்வதாக முதல்வர் மீது ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

மக்கள் கிராம சபை என்ற பெயரில் திமுக தலைவர் ஸ்டாலின், சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார். அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியத்துக்குட்பட்ட அவளிவநல்லூர் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார்.

அப்போது பேசிய ஸ்டாலின், திமுக ஆட்சியில் பெண்கள் முன்னேற்றத்திற்காக கொண்டு வரப்பட்ட திட்டங்களை விளக்கிப் பேசினார். இன்னும் நான்கு மாதங்கள் பொறுத்துக் கொள்ளுங்கள். ஒரு ஆட்சிமாற்றம் வரப்போகிறது. இந்த நான்கு மாதங்களில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு நீங்கள் தயாராகி விட்டீர்களா? என்று ஸ்டாலின் மக்களை நோக்கி கேட்க, தயார்… தயார்… என்று அவர்கள் பதில் அளித்தனர்.

தொடர்ந்து, “அமைச்சர் காமராஜின் மணல் கொள்ளை, அரிசியில் ஊழல் என எல்லா விவரங்களும் என்னிடத்தில் உள்ளன. அவை அனைத்தும் உங்களுக்கும் தெரிந்தவைதான். அதனால்தான், அவரது காமராஜ் என்ற பெயரை கமிஷன்ராஜ் என்று மாற்றிக் கொள்ளுங்கள் என்று கூட நான் முன்னர் சொல்லி இருக்கிறேன்.

எடப்பாடி பழனிசாமி தொடங்கி அனைத்து அமைச்சர்களும் அப்படி முறைகேடு செய்பவர்களாகத்தான் இருக்கிறார்கள். இன்னும் நான்கு மாதங்கள்தான் இருக்கிறது. நிச்சயம் ஆட்சிக்கு அவர்கள் வரப் போவதில்லை. அது நம்மை விட அவர்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது.அதனால் இயன்றவரை இருப்பதை எல்லாம் சுருட்டிக் கொண்டு, கொள்ளையடித்துச் சென்றுவிட வேண்டும் என்று திட்டமிட்டு அந்தச் செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்” என்றார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான் ஒரு விவசாயி நான் ஒரு விவசாயி என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். ஒரு ரவுடி தான், எப்பொழுதும் நான் ஒரு ரவுடி நான் ஒரு ரவுடி என்று சொல்லிக் கொண்டே இருப்பான் என்று விமர்சித்த ஸ்டாலின்,

“இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி பெரிய சாதனை மனிதரைப் போல, கோடி கோடியாக செலவு செய்து, ஊடகங்களில் விளம்பரம் செய்கிறார். யாருடைய பணத்தை எடுத்துச் செலவு செய்கிறார்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.நாம் எதற்காக வரி செலுத்துகிறோம்? நமக்கு நல்ல திட்டங்கள் வர வேண்டும். அது மக்களுக்கு பயன் தர வேண்டும். ஆனால் இன்றைக்குத் தனிப்பட்ட முதலமைச்சருக்கு, தனிப்பட்ட அமைச்சர்களுக்குப் பயன்படும் வகையில் செலவழித்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று குற்றம்சாட்டினார்.

இறுதியாக அதிமுக அரசை நிராகரிப்போம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதில் ஸ்டாலின் கையெழுத்திட்டார். அதன்பிறகு அங்கிருந்த மக்களும் கையெழுத்திட்டுவிட்டுச் சென்றனர்.

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்  ...

5 நிமிட வாசிப்பு

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்   

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்: அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா? ...

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்:  அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா?

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி! ...

2 நிமிட வாசிப்பு

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி!

திங்கள் 4 ஜன 2021