மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 4 ஜன 2021

மொழிப் பெயரை தாங்கியுள்ள ஒரே மாநிலம்: தலைமை நீதிபதி பெருமிதம்!

மொழிப் பெயரை தாங்கியுள்ள ஒரே மாநிலம்: தலைமை நீதிபதி பெருமிதம்!

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சஞ்ஜிப் பானர்ஜி இன்று பொறுப்பேற்றார்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த ஏ.பி.சாஹி கடந்த டிசம்பர் 31ஆம் தேதியுடன் ஓய்வுபெற்றார். இதனையடுத்து, புதிய தலைமை நீதிபதியாக கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார்.

சென்னை ஆளுநர் மாளிகையில் இன்று (ஜனவரி 4) காலை நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சஞ்ஜிப் பானர்ஜிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் 50 வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், நீதிபதிகள் கலந்துகொண்டனர்.

பின்னர் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜிக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் வரவேற்பு விழா நடைபெற்றது.அந்த நிகழ்வில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், மத்திய மாநில அரசு வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பதவியேற்ற பின்பு உரையாற்றிய சஞ்ஜிப் பானர்ஜி, “இந்தியாவிலேயே மொழியின் பெயரைக் கொண்டுள்ள ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். திருவள்ளுவரின் மண்ணுக்கு வந்துள்ளது பெருமை அளிக்கிறது. தமிழகத்தை என்னுடைய மற்றொரு தாய்வீடாகவே கருதுகிறேன். தொன்மையான மொழியாம் தமிழை இன்னும் கோடிக்கணக்கான பேர் செருக்கோடு பெருமையோடும் பேசி வருகின்றனர்: முதலில் நான் ஒரு நீதிபதியாக பணியாற்றுவேன். அதன்பிறகுதான் தலைமை நீதிபதி” என்றார்.

மேலும், பாரம்பரியமிக்க கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் இருந்து இன்னொரு பாரம்பரியமிக்க சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வந்துள்ளது தனக்கு பெருமை அளிப்பதாகவும், வழக்கறிஞர்களின் ஒத்துழைப்பின்றி நீதி பரிபாலனம் சாத்தியமில்லை என்றும் அவர் கூறினார்.

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்  ...

5 நிமிட வாசிப்பு

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்   

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்: அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா? ...

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்:  அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா?

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி! ...

2 நிமிட வாசிப்பு

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி!

திங்கள் 4 ஜன 2021