மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 4 ஜன 2021

2 கட்டங்களாக சட்டமன்றத் தேர்தலா? தேர்தல் அதிகாரி

2 கட்டங்களாக சட்டமன்றத் தேர்தலா? தேர்தல் அதிகாரி

2 கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறுமா என்பது குறித்து தேர்தல் அதிகாரி பதிலளித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத்தின் பதவிக் காலம் வரும் மே 24ஆம் தேதியுடன் நிறைவுபெறுகிறது. இதனால் சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகம் வந்த இந்தியத் தேர்தல் ஆணைய தலைமை செயலர் உமேஷ் சின்ஹா அடங்கிய குழு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தேர்தல் பற்றி ஆலோசனை மேற்கொண்டது.

பெரும்பாலான கட்சிகள் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த கோரிக்கை விடுத்தன. இதேபோல மே மாதம் கடும் வெயிலாக இருக்கும் என்பதால் முன் கூட்டியே தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்திடம் அதிமுக கோரிக்கை வைத்தது. ஆனால், கூடுதல் வாக்குச்சாவடிகளை அமைக்க வேண்டி இருப்பதால் தமிழகத்தில் முன் கூட்டியே தேர்தல் நடத்தப்படுவதற்கு வாய்ப்பு இல்லை என்று தமிழக தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாஹு தெரிவித்துவிட்டார்.

கொரோனா அச்சுறுத்தல், உருமாறிய கொரோனா ஆகியவை காரணமாக தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வந்தன. இதுதொடர்பாக மாநில தேர்தல் அதிகாரி, தமிழக அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசித்து முடிவெடுக்கும் என கூறப்பட்டது.

இந்த நிலையில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்ற தகவலை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாஹு மறுத்துள்ளார்.சென்னையில் இன்று (ஜனவரி 4) செய்தியாளர்களிடம் பேசிய சாஹு, “தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அதுபோன்ற எந்தப் பரிந்துரையும் தேர்தல் ஆணையத்துக்கு செய்யப்படவில்லை” என்று கூறியுள்ளார். திட்டமிட்டபடி இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 20ம் தேதி வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

திங்கள் 4 ஜன 2021