மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 4 ஜன 2021

கருணாஸுக்கு பதிலாக ஜான் பாண்டியன்: அதிமுகவின் தெற்கு கேம்

கருணாஸுக்கு பதிலாக ஜான் பாண்டியன்: அதிமுகவின் தெற்கு கேம்

அதிமுக கூட்டணியில் தற்போது திருவாடனை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கும் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் மீண்டும் அத்தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடுவது சந்தேகம்தான் என்கிறது தெற்கத்திய அதிமுக வட்டாரம்.

2016 தேர்தலின்போது அதிமுக கூட்டணியில் இத்தொகுதியை தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர் ஜான் பாண்டியன், தான் பெறுவோமென்று காத்திருந்தார். ஆனால் அப்போது திடீரென வேலை செய்த முக்குலத்து லாபியால், முக்குலத்தோர் புலிப்படை என்ற புதிய அமைப்பை உருவாக்கி சினிமா நடிகர் கருணாஸ் திடீரென அதிமுகவின் இரட்டை சிலை சின்னத்திலேயே நின்று வெற்றிபெற்றார்.

வெற்றிபெற்ற சில மாதங்களிலேயே ஜெயலலிதா மறைந்துவிட்ட நிலையில், கருணாஸ், கொங்கு தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகிய மூவரும் தங்களுக்கென ஒரு அணி அமைத்து செயல்பட்டனர். அதிலும் கருணாஸ் சமீப காலமாக அதிமுகவை வெளிப்படையாகவே எதிர்த்துக் கொள்ளும் அளவுக்கு சென்றுவிட்டார். ‘அவர் எந்நேரமும் சசிகலாவின் பக்கம் சென்றுவிடுவார். எனவே அவருக்கு மீண்டும் சீட் கொடுக்க வேண்டாம்’ என்று ராமநாதபுரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தேவேந்திர குல வேளாளர் பொதுப் பெயர் ஆணை இன்னும் முப்பது நாட்களில் வெளியிடப்படும் என்று பரமக்குடி பயணத்தின் போது அறிவித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இதன் பின்னால் பெரிய அரசியல் இருக்கிறது என்கிறார்கள்.

“எப்படியும் தென் மாவட்டங்களில் அதிமுகவுக்கு முக்குலத்து வாக்குகள் பழையபடி கிடைக்காது என்று முதல்வர் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்திருக்கிறது. இந்நிலையில் தென் மாவட்டங்களில் மட்டுமல்ல மேற்கு, கிழக்கு என பெரிய சமுதாயமான தேவேந்திர குல வேளாளர்களின் பொதுப் பெயர் கோரிக்கையை நிறைவேற்றினால் முக்குலத்து வாக்கு வங்கியால் ஏற்படும் இழப்பை அதிமுக எளிதாக ஈடுகட்டும் என்று கணக்குப் போடுகிறார் முதல்வர். மேலும் கடந்த முறையே திருவாடானை தொகுதியில் அதிமுக சார்பில் நிற்க வேண்டிய ஜான் பாண்டியனை இம்முறை கருணாஸுக்கு பதிலாக அதிமுக சார்பில் நிறுத்தலாம் என்றும் ஒரு திட்டம் அதிமுக தலைமையில் தயாராகிக் கொண்டிருக்கிறது” என்கிறார்கள் தென் மாவட்ட அதிமுக வட்டாரத்தில்.

இந்த தேர்தலில் அதிமுக சார்பில் வாய்ப்பு கிடைக்காவிட்டால் கருணாஸ் மீண்டும் போட்டியிடுவாரா என்பது சந்தேகம்தான். அதேநேரம் இரட்டை இலை சின்னத்தில் ஜான் பாண்டியன் நிற்பார் என்ற தகவலால் அவரது ஆதரவாளர்கள் உற்சாகம் அடைந்திருக்கிறார்கள்.

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

திங்கள் 4 ஜன 2021