மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 4 ஜன 2021

விஜய், சிம்பு கோரிக்கையை ஏற்ற முதல்வர்!

விஜய், சிம்பு கோரிக்கையை ஏற்ற முதல்வர்!

தமிழகத்தில் திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தலினால் கடந்த வருடம் மார்ச் மாதம் திரையரங்குகள் மூடப்பட்டன. அதாவது, கடந்த மார்ச் 13ஆம் தேதி தாராள பிரபு, அசுரகுரு, வால்டர் படங்களே கடைசியாக முழு இருக்கையுடன் வெளியான படங்கள். அதன்பிறகு திரையரங்குகள் மூடப்பட்டன.

கொரோனா ஊரடங்கு தளர்வின் போது, திரையரங்குகள் 50% இருக்கையுடன் செயல்பட அரசு அனுமதி அளித்திருந்தது. அதன்படி, கடந்த வருடம் அக்டோபர், நவம்பர் மாதங்களில் பிஸ்கோத், இரண்டாம் குத்து, காவல்துறை உங்கள் நண்பன் உள்ளிட்ட சில படங்கள் திரையரங்கில் வெளியாகின. ஆனால், சின்ன பட்ஜெட் படங்களே தொடர்ச்சியாக வெளியானதால் பெரிதாக திரையரங்கில் மக்கள் வருகை இல்லாமல் குறைவாகவே இருந்தது. அதோடு, ஹாலிவுட் படங்களான டெனட், வொண்டர் வுமன் படங்களும் வெளியாகின. இவ்விரு படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்த நிலையில், பொங்கல் தின சிறப்பாக ஜனவரி 13ஆம் தேதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படம் வெளியாகிறது. அதோடு, ஜனவரி 14ஆம் தேதி சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ஈஸ்வரன் படமும் வெளியாக இருக்கிறது. பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாவதால், திரையரங்கில் 100% இருக்கைக்கு அனுமதி கோரி திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துவந்தனர். சமீபத்தில், நடிகர் விஜய் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து கோரிக்கை வைத்தார்.

தற்பொழுது, விஜய், சிம்பு மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் உள்ளிட்ட திரைத்துறையினரின் கோரிக்கையை ஏற்று, தமிழகத்தில் திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதை, தமிழகத் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆணையிட்டு அனுமதி அளித்துள்ளார். ஒரு பெரிய பட்ஜெட் படம் வெளியாகும் போது, நூறு சதவிகித இருக்கைகளுக்கு அனுமதி அளிப்பதன் மூலம், திரையரங்குக்கு மக்கள் வருவது அதிகரிக்கும். அதனால், மீண்டும் திரையரங்குகள் புத்துயிர் பெறும் என திரையரங்கத்தினர் நம்புகிறார்கள். அதோடு, அடுத்தடுத்து புதுப் படங்கள் வெளியாவதற்கும் இந்த அனுமதி நம்பிக்கையளிக்கும் என்கிறார்கள்.

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்  ...

5 நிமிட வாசிப்பு

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்   

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்: அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா? ...

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்:  அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா?

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி! ...

2 நிமிட வாசிப்பு

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி!

திங்கள் 4 ஜன 2021