மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 3 ஜன 2021

ஸ்டாலின் டென்ஷனுக்கு ஜெயக்குமார் சொல்லும் மூன்று காரணங்கள்!

ஸ்டாலின் டென்ஷனுக்கு ஜெயக்குமார் சொல்லும் மூன்று காரணங்கள்!

திமுக தலைவர் ஸ்டாலின் கிராம சபையில் கோபமாக நடந்துகொள்வதற்கு மூன்று பேர் காரணமாக இருக்கிறார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

இன்று (ஜனவரி 3) சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார் முதலில் சட்டமன்றத் தேர்தல் இருகட்டமாக நடத்தப்பட வாய்ப்பிருக்கிறதா என்ற கேள்விக்கு,

“ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என்று ஏற்கனவே தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்திருக்கிறோம்.அதுதான் எங்கள் நிலைப்பாடு. அப்படியே நடக்கும் என்று நம்புகிறோம்” என்று கூறினார்.

கோவையில் திமுகவின் மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், திமுக நினைத்தால் முதல்வர் நிகழ்ச்சியே நடக்காது என்று கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஜெயக்குமார்,

“ ஸ்டாலினின் உருட்டல் மிரட்டலுக்கெல்லாம் அஞ்சுகிற கட்சி இது கிடையாது. அவர் அப்பாவையே ஓரங்கட்டிய கட்சி அதிமுக. புரட்சித் தலைவரும், அம்மாவும் பத்து வருடம் திமுகவை ஓரங்கட்டிவிட்டனர். எனவே இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சப் போவதில்லை. பூச்சாண்டி காட்ட வேண்டாம் என்று ஸ்டாலினுக்கு சொல்லிக் கொள்கிறேன்.

அவர் நடத்தியது கிராம சபையா? குண்டர் சபையா? கிராம சபை என்றால் எல்லாரும்தான் வருவார்கள். கேள்வி கேட்பார்கள். நீங்கள் எல்லா கேள்விகளும் கேட்கிறீர்கள். நான் அதற்கு பதில் சொல்கிறேனே ... ஆனால் ஸ்டாலினுக்கு கருணை, கடமை.பொறுமை மூன்றும் இல்லை. ஒரு தாழ்த்தப்பட்ட பெண்மணியின் கேள்விக்கு பதில் சொல்லாமல்... அவர் மீது தாக்குதல் நடத்தி பெண் என்றும் பார்க்காமல் பெண்ணினத்தையே அவமானப்படுத்திவிட்டார்கள். ஸ்டாலின் தனக்கு இருக்கும் டென்ஷனால்தான் இப்படி கோபப்படுகிறார்.

மு.க. அழகிரி தனியாக ஆலோசனை நடத்துகிறார் என்ற டென்ஷன்... இன்னொரு பக்கம் கலாநிதி, தயாநிதி மாறன் தயாராக இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் கனிமொழி தயாராக இருக்கிறார். இந்த மண்டைக் குடைச்சலைதான் கிராம சபையில் கோபமாக வெளிப்படுத்தியிருக்கிறார்” என்று விளக்கம் சொன்னார் ஜெயக்குமார்.

வேந்தன்

கரூரில் கடல்- பிரம்மாண்டத்தை மிஞ்சும் பிரம்மாண்டம்: செந்தில்பாலாஜியைப் புகழ்ந்த ...

4 நிமிட வாசிப்பு

கரூரில் கடல்- பிரம்மாண்டத்தை மிஞ்சும் பிரம்மாண்டம்: செந்தில்பாலாஜியைப் புகழ்ந்த ஸ்டாலின்

சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் சொத்துகள் முடக்கம்!

3 நிமிட வாசிப்பு

சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் சொத்துகள் முடக்கம்!

சென்னை வரும் திரௌபதி முர்மு: பன்னீர்- எடப்பாடி இணைந்து சந்திப்பார்களா? ...

3 நிமிட வாசிப்பு

சென்னை வரும் திரௌபதி முர்மு: பன்னீர்- எடப்பாடி இணைந்து சந்திப்பார்களா?

ஞாயிறு 3 ஜன 2021