மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 3 ஜன 2021

மழைக்கு ஒதுங்கிய தேமுதிகவினர் கைது!

மழைக்கு ஒதுங்கிய தேமுதிகவினர் கைது!

மழையில் நனையாமல் இருக்க சுங்கச்சாவடியில் ஒதுங்கிய தேமுதிகவினரை போலீசார் கைது செய்தனர்.

விடுதலை போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாளை முன்னிட்டு தேமுதிக சார்பில் அஞ்சலி செலுத்த அக்கட்சியின் துணைச் செயலாளர் சுதீஷ் சென்னையிலிருந்து விமானத்தில் மதுரை சென்றார். அங்கிருந்து கார் மூலம் எட்டயபுரம் செல்ல இருந்த அவருக்கு வரவேற்பு அளிக்க திருமங்கலம் அடுத்த கப்பலூர் சுங்கச் சாவடி பகுதியில் தேமுதிகவினர் காத்திருந்தனர்.

அப்போது திடீரென மழை பெய்ததால் நனையாமல் இருக்க சுங்கச் சாவடி கூரைகளின் கீழே ஒதுங்கியதால், வாகனங்கள் செல்ல இடமில்லாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அங்கு வந்த காவல் துறையினர், தேமுதிகவினரை ஓரமாக நிற்குமாறு அறிவுறுத்தினர். இதனால் காவல் துறை, தேமுதிக என இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தேமுதிக மாவட்டச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 50 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

இதனையறிந்து அப்பகுதியில் மறியல் போராட்டத்தில் குதித்த தேமுதிகவைச் சேர்ந்தவர்கள், கைது செய்தவர்களை விடுவிக்கும் வரை போராட்டம் நடைபெறும் என அறிவித்தனர். அப்பகுதியாக சென்ற வீரபாண்டிய கட்டபொம்மன் இளைஞர் பேரவையினரும், இவருக்கு ஆதரவாக போராட்டத்தில் இறங்கினர். இதனால் சுங்கச்சாவடியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஒருவழியாக தேமுதிகவினர் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

முன்னதாக விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சுதீஷிடம் கூட்டணி தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவரோ, “இதுவரை அதிமுக கூட்டணியில்தான் நீடித்து வருகிறோம். தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகுதான் மற்றவை குறித்து முடிவெடுத்து அறிவிப்போம்” என்றார்.

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. ...

6 நிமிட வாசிப்பு

கனிமொழி தொகுதியில் நடக்கும்; கரூர் மட்டும் என்ன...? - காங். எம்.பி. தர்ணா!

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

5 நிமிட வாசிப்பு

மாடு மேய்க்கிற பையனை மா.செ. ஆக்கவா? - இராமதாஸ் சீற்றம்!

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

3 நிமிட வாசிப்பு

பாலாற்றில் 100 தடுப்பணைகள்!

ஞாயிறு 3 ஜன 2021