மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 3 ஜன 2021

யாருக்கு முதலில் கொரோனா தடுப்பூசி: விஜயபாஸ்கர் தகவல்!

யாருக்கு முதலில் கொரோனா தடுப்பூசி: விஜயபாஸ்கர் தகவல்!

கொரோனா தடுப்பூசி முதலில் யாருக்கு போடப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா மற்றும் பாரத் பயோடெக் ஆகிய நிறுவனங்கள் தயாரித்துள்ள கோவிஷீல்ட், கோவாக்ஸின் ஆகிய கொரோனா தடுப்பூசிகளை அவசரகால பயன்பாட்டிற்கு உபயோகிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது.

மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்த நிலையில், மருந்துகளை மக்களுக்கு செலுத்தும் பணி விரைவில் தொடங்க உள்ளது. முதற்கட்டமாக முன்னுரிமை பட்டியலில் உள்ளவர்களுக்கு செலுத்தப்படுகிறது. அந்த மருந்துகள் பாதுகாப்பானது என்று உறுதியளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பிரதமர் மோடி, அதற்காக ஆராய்ச்சியாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சென்னையில் இன்று (ஜனவரி 3) செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “கோவிஷீல்டு, கோவாக்சின் மருந்துகளுக்கு அனுமதி தந்தது மக்களுக்கு நம்பிக்கை அளித்திருக்கிறது. தமிழகத்தில் முதல் கட்டமாக 2.5 கோடி மருந்துகளை சேமித்து வைப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.

6 லட்சம் முன்களப் பணியாளர்கள் அடையாளம் காணப்பட்டு தடுப்பூசி ஒத்திகை நடத்தப்பட்டதாகவும், முதலாவதாக முன்கள பணியாளர்களுக்கும் பின்னர் பொதுமக்களுக்கும் தடுப்பு செலுத்தப்படும் என்றும் அறிவித்த அமைச்சர், தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கொரோனா இல்லாத நிலையை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என விவரித்தார்.

எழில்

ஒரு நிதியமைச்சர் எழுபது கோடி எதிர்க்கட்சிக்காரரா? மீண்டும் ...

8 நிமிட வாசிப்பு

ஒரு நிதியமைச்சர் எழுபது கோடி எதிர்க்கட்சிக்காரரா? மீண்டும் சர்ச்சையில் பிடிஆர்

இதுதான் கொழுந்தியா மகள் வளைகாப்பா? அண்ணாமலைக்கு எதிராக மதுரை! ...

4 நிமிட வாசிப்பு

இதுதான் கொழுந்தியா மகள் வளைகாப்பா? அண்ணாமலைக்கு எதிராக மதுரை!

கொடநாடு ‘சம்பவம்’: ‘கூட்டுறவு’ இளங்கோவனுக்கு விரைவில் சம்மன்! ...

13 நிமிட வாசிப்பு

கொடநாடு ‘சம்பவம்’: ‘கூட்டுறவு’ இளங்கோவனுக்கு விரைவில் சம்மன்!

ஞாயிறு 3 ஜன 2021