மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 3 ஜன 2021

2 கட்டங்களாக தமிழக சட்டமன்றத் தேர்தல்?

2 கட்டங்களாக தமிழக சட்டமன்றத் தேர்தல்?

தமிழக சட்டமன்றத் தேர்தலை இரண்டு கட்டங்களாக நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசிக்க இருக்கிறது.

தமிழக சட்டமன்றத்தின் பதவிக் காலம் வரும் மே 24ஆம் தேதியுடன் நிறைவுபெறுகிறது. இதனால் சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகம் வந்த இந்தியத் தேர்தல் ஆணைய தலைமை செயலர் உமேஷ் சின்ஹா அடங்கிய குழு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தேர்தல் பற்றி ஆலோசனை மேற்கொண்டது.

பெரும்பாலான கட்சிகள் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த கோரிக்கை விடுத்துள்ளன. இதேபோல மே மாதம் கடும் வெயிலாக இருக்கும் என்பதால் முன் கூட்டியே தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்திடம் அதிமுக கோரிக்கை வைத்தது. ஆனால், கூடுதல் வாக்குச்சாவடிகளை அமைக்க வேண்டி இருப்பதால் தமிழகத்தில் முன் கூட்டியே தேர்தல் நடத்தப்படுவதற்கு வாய்ப்பு இல்லை என்று தமிழக தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாஹு தெரிவித்துவிட்டார்.

தமிழகத்துடன் புதுவை, அசாம், கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றங்களுக்கான பதவிக்காலம் முடிவடைவதால் தேர்தலுக்கான இறுதிப் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. பள்ளிகள் இயங்கும் நாட்கள், பண்டிகை நாட்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தேர்தல் தேதி முடிவு செய்யப்பட இருக்கிறது.

கொரோனா அச்சுறுத்தல், உருமாறிய கொரோனா ஆகியவை காரணமாக தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இதுதொடர்பாக மாநில தேர்தல் அதிகாரி, தமிழக அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசிக்க இருக்கிறது. அதன்பிறகே இறுதி முடிவு எடுத்து அறிவிக்கப்படவுள்ளது.

கடந்த முறை தமிழகம் மற்றும் புதுவையில் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ...

4 நிமிட வாசிப்பு

அன்று குணசேகரன் இன்று கரு. பழனியப்பன்: பாஜகவின் டெர்மினேஷன் ஆபரேஷன்

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் ...

7 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலா- தினகரன் இடைவெளி: தூது போன குடும்பப் பிரமுகர்!

ஞாயிறு 3 ஜன 2021