மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 3 ஜன 2021

அரசியலை விட்டு விலகுகிறாரா காங்கிரஸ் செயல் தலைவர்?

அரசியலை விட்டு விலகுகிறாரா காங்கிரஸ் செயல் தலைவர்?

தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய நிர்வாகிகள் பட்டியல் நேற்று (ஜனவரி 2) வெளியிடப்பட்டது. அளவுக்கு அதிகமான நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்கள் என்ற விமர்சனம் ஒருபக்கம் இருந்தாலும்... தங்களுக்கு எந்தப் பதவியும் கிடைக்கவில்லை என்ற வருத்தமும் பலருக்கு இருக்கிறது.

இந்த வகையில் தமிழக காங்கிரஸின் செயல் தலைவராக தற்போது இருக்கும் மோகன் ரங்கராஜன் குமாரமங்கலத்துக்கு எந்த முக்கியப் பதவியும் வழங்கப்படாததாலும், அவர் சிபாரிசு செய்த பலருக்கும் பதவி வழங்கப்படாததாலும் வருத்தத்திலும் கோபத்திலும் இருக்கிறார்.

அவரது சமூக தளப் பதிவுகளே இதைக் காட்டுகின்றன.

நேற்றும் இன்றும் தனது கருத்துகளை காரசாரமாக மோகன் ரங்கராஜன் குமாரமங்கலம் வெளிப்படுத்தி வருகிறார்.

”சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய நேரமாக இது இருக்கிறது. பத்து ஆண்டுகள் காத்திருப்பது என்பது மிக நீண்ட காலம்” என்று அவர் நேற்று பதிவிட்டதை ஒட்டி அவரது டைம் லைனில் கருத்து தெரிவித்த பாஜகவினர் பலரும், “நீங்கள் இருக்க வேண்டிய இடம் பாஜக. இங்கே வந்துவிடுங்கள்” என்று வெளிப்படையாகவே அழைத்தனர். இதையடுத்து அவர் பாஜகவுக்கு போகிறார் என்று தகவல்கள் பரவின.

அதற்கு பதிலளித்த மோகன் ரங்கராஜன் குமாரமங்கலம், “வதந்தி பரப்புவர்களுக்காக சொல்கிறேன்... நான் அரசியலை விட்டு விலகினாலும் விலகுவேனே அன்றி, பாஜகவில் சேர மாட்டேன். அவர்களோடு எனக்கு வாழ்நாள் யுத்தம் இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஈவிகேஸ் இளங்கோவன், தங்கபாலு, திருநாவுக்கரசர் உள்ளிட்ட தலைவர்களின் மகன்களுக்கு மாநிலப் பொதுச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டிருப்பதை பற்றி மறைமுகமாக சாடியிருக்கும் மோகன் ரங்கராஜன் குமாரமங்கலம்,

“ தமிழக காங்கிரசில் இரு முக்கியமான விதிகள் இருக்கின்றன. தந்தை இல்லாத மகனாக இருக்கக் கூடாது. மகன் இல்லாத தந்தையாக இருக்கக் கூடாது. அதேபோல இரண்டாவது விதி என்னவென்றால்... பணமில்லாமல் செயல்வீரனாக ஒருபோதும் இருக்காதே, செயல்வீரனிடம் பணத்தை ஒப்படைத்துவிடாதே”என்று தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் தலைவர்களின் மகன்களுக்குத்தான் பதவி என்றும், பணம் கொடுத்தவர்களுக்குத்தான் பதவி என்றும் நேரடியாகவே குற்றம் சாட்டியிருக்கிறார் மோகன் ரங்கராஜன் குமாரமங்கலம்.

-வேந்தன்

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்! ...

8 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் அட்டைப் பெட்டி டெண்டர்: அமலானது செந்தில்பாலாஜி மாடல்!

டிஜிட்டல் திண்ணை: கனிமொழியா? உதயநிதியா? மேயர் ரேஸ்

11 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை:  கனிமொழியா? உதயநிதியா?  மேயர் ரேஸ்

பிரதமர் பேச்சில் தடுமாற்றம் ஏன்? உண்மை இதோ...

6 நிமிட வாசிப்பு

பிரதமர் பேச்சில் தடுமாற்றம் ஏன்?   உண்மை இதோ...

ஞாயிறு 3 ஜன 2021