மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 3 ஜன 2021

எதிர்க்கட்சி அந்தஸ்தாவது கொடுப்பார்கள்: ஸ்டாலினுக்கு எடப்பாடி அறிவுரை!

எதிர்க்கட்சி அந்தஸ்தாவது கொடுப்பார்கள்: ஸ்டாலினுக்கு எடப்பாடி அறிவுரை!

மக்களை நேர்மையான வழியில் சந்தித்தால் எதிர்க்கட்சி அந்தஸ்தாவது கொடுப்பார்கள் என ஸ்டாலினுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நாமக்கல்லில் கடந்த டிசம்பர் 29ஆம் தேதி தொடங்கினார். இரண்டாவது கட்டமாக மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

தூத்துக்குடியில் இன்று (ஜனவரி 3) பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வீரபாண்டிய கட்டபொம்மனின் 260ஆவது பிறந்த நாளையொட்டி, கோவில்பட்டியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ச்சியாக வில்லிசேரியில் பருத்தி விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.

அங்கு விவசாயிகள் மத்தியில் உரையாற்றிய முதல்வர், “விவசாயிகளுக்கு வழங்கப்படும் பயிர் இழப்பீட்டுத் தொகை உயர்த்தியது அதிமுக அரசு. மக்காச்சோளத்தில் ஏற்பட்ட அமெரிக்கன் படைப் புழு தாக்குதலை தடுக்க, அரசே 45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மருந்து தெளித்து விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படாமல் பாதுகாத்தது. தமிழக விவசாயிகளை குழந்தைபோல் அதிமுக அரசு பாதுகாத்து வருகிறது” என்று தெரிவித்தார்.

விவசாயத்தை பற்றி திமுக தலைவர் ஸ்டாலினுக்கு என்ன தெரியும் என கேள்வி எழுப்பிய முதல்வர், “ரவுடிகளோடு இருப்பதால், அதற்கேற்றாற்போல் ஸ்டாலின் நடந்து கொள்கிறார். அதிமுகவை உடைத்து இந்த ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்ற தீய நோக்கத்தோடு ஸ்டாலின் செயல்படுகிறார். அதிமுக அரசுக்கு எதிராக திட்டமிட்டு அவதூறு பிரசாரத்தை மு.க.ஸ்டாலின் செய்து வருகிறார்” எனக் குற்றம்சாட்டினார்.

மேலும், “இந்த ஆட்சி மக்களாட்சி, இதை மக்கள்தான் ஆள்கின்றனர். கிராமசபை மூலம் மக்களை குழப்பி ஆட்சிக்கு வர திமுக துடிக்கிறது. மக்கள் விழிப்புடன் இருங்கள்.நேர்மையான வழியில் மக்களை சந்தித்தால் ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்தாவது மக்கள் அளிப்பார்கள்” என்றும் முதல்வர் கூறினார்.

கரூரில் கடல்- பிரம்மாண்டத்தை மிஞ்சும் பிரம்மாண்டம்: செந்தில்பாலாஜியைப் புகழ்ந்த ...

4 நிமிட வாசிப்பு

கரூரில் கடல்- பிரம்மாண்டத்தை மிஞ்சும் பிரம்மாண்டம்: செந்தில்பாலாஜியைப் புகழ்ந்த ஸ்டாலின்

சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் சொத்துகள் முடக்கம்!

3 நிமிட வாசிப்பு

சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ் சொத்துகள் முடக்கம்!

சென்னை வரும் திரௌபதி முர்மு: பன்னீர்- எடப்பாடி இணைந்து சந்திப்பார்களா? ...

3 நிமிட வாசிப்பு

சென்னை வரும் திரௌபதி முர்மு: பன்னீர்- எடப்பாடி இணைந்து சந்திப்பார்களா?

ஞாயிறு 3 ஜன 2021