மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 2 ஜன 2021

திமுக மாநாட்டில் அசாதுதின் ஓவைசி: கூட்டணிக்கு அச்சாரமா?

திமுக மாநாட்டில் அசாதுதின் ஓவைசி: கூட்டணிக்கு அச்சாரமா?

திமுகவின் மாநாட்டில் ஐதராபாத் எம்.பி அசாதுதின் ஓவைசி பங்கேற்க இருக்கிறார்.

சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் வரும் 6ஆம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இதயங்களை இணைப்போம் என்ற தலைப்பில் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் இஸ்லாமிய இயக்கங்களின் தலைவர்கள், உலமாக்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் பங்கேற்க உள்ளனர்.இதற்காக இஸ்லாமிய இயக்கங்களின் தலைவர்களுக்கு திமுக சிறுபான்மை நல உரிமை அணி செயலாளர் மஸ்தான் நேரில் சென்று அழைப்பு விடுத்து வருகிறார்.

இந்த நிலையில் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லிம் கட்சியின் தலைவரும், ஐதராபாத் மக்களவை உறுப்பினருமான அசாதுதின் ஓவைசியை நேற்று மாலை மஸ்தான் நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, இதயங்களை இணைப்போம் மாநாட்டிற்கு வருமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட ஓவைசி அந்த மாநாட்டில் கலந்துகொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார்.

பிகார் சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 5 இடங்களில் வெற்றிபெற்றது ஓவைசி கட்சி. மேலும் 19 தொகுதிகளில் வாக்குகளைப் பிரித்ததால் ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைக்கும் வாய்ப்பை இழந்தது,

வரும் 2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அக்கட்சி தமிழகத்திலும் களமிறங்க ஆயத்தமாகி வருகிறது. திமுகவுடன் கூட்டணி அமைக்க ஓவைசி கட்சி தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இல்லையெனில் தனித்துக் களம் காண்போம், பிகார் போல நடந்தால் திமுகதான் பொறுப்பு என்று சொல்லிவந்தது.

ஆனால், தமிழகத்தின் அரசியல் களம் வேறு, ஓவைசியால் இங்கு வெல்ல முடியாது என திமுக கூட்டணியில் உள்ள காதர் மொய்தீன், ஜவாஹிருல்லா உள்ளிட்ட தலைவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில்தான் தற்போது ஓவைசிக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது கூட்டணிக்கு அச்சாராமாகவா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனால் முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி ஆகியவை அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

சனி 2 ஜன 2021