மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 2 ஜன 2021

கிராம சபைக் கூட்டத்தில் வேலுமணி அனுப்பிய ஆளா? ஸ்டாலின் ஆவேசம்

கிராம சபைக் கூட்டத்தில் வேலுமணி அனுப்பிய ஆளா? ஸ்டாலின் ஆவேசம்

தமிழகம் முழுதும், அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற தலைப்பில் மக்கள் கிராம சபைக் கூட்டங்களை நடத்த திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படியே அனைத்து கிராமங்களிலும் மக்கள் கிராம சபைக் கூட்டங்கள் நடந்து வருகின்றன. இதில் சில கூட்டங்களில் கட்சித் தலைவர் என்ற முறையில் ஸ்டாலின் கலந்துகொள்கிறார்.

இந்த வகையில் இன்று (ஜனவரி 2) கோவை மாவட்டம் தேவராயபுரம் பகுதியில் மக்கள் கிராம சபை கூட்டத்தில் கலந்துகொண்டார் ஸ்டாலின். இக்கூட்டத்தில் ஸ்டாலின் பேசி முடித்த பின் மக்களில் சிலர் தங்கள் கருத்துகளை எடுத்து வைத்தனர்.

அப்போது கூட்டம் முடியும் தருவாயில் ஒரு பெண் எழுந்து, “நான் உங்களிடம் கேள்வி கேட்க வேண்டும்”என்றார். அப்போது ஸ்டாலின், “மேடம்...நீங்க இந்த ஊராட்சியா? உங்க பெயர் என்ன? கேள்வி கேட்கும் பெயர் பட்டியலில் உங்கள்பெயர் இல்லையே?” என்று கேட்டார்.

“நான் இந்தத் தொண்டாமுத்தூர் தொகுதியில்தான் இருக்கிறேன். மைல் கல் என்ற ஊரில் இருந்து வருகிறேன். இந்த ஊர் கூட உங்களுக்குத் தெரியவில்லையா?”என்று கேட்டார் அந்தப் பெண். ஸ்டாலினை எதிர்த்துப் பேசுகிறாரே என்பதை உணர்ந்து அருகே இருந்த திமுகவினர் அந்தப் பெண்ணை சூழ்ந்துகொண்டார்கள்.

அப்போதே அந்த பெண், ‘திமுக ஒழிக திமுக ஒழிக’ என்று கோஷம் போட ஆரம்பித்துவிட்டார்.

“உங்களுக்கு பதில் சொல்ல முடியாது. உங்களை வேலுமணி இங்கே அனுப்பியிருக்கிறார். வெளியே போங்க” என்று ஸ்டாலின் சொன்னதும் திமுக பெண் நிர்வாகிகள் அந்த பெண்ணை கூட்டத்தில் இருந்து வெளியே அனுப்பினார்கள். அப்போதும் அவர், “திமுக ஒழிக” என்று கத்திக் கொண்டே வெளியே சென்றார்.

இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டு பின் கூட்டம் தொடர்ந்து நடந்தது.

-வேந்தன்

கொடநாடு வழக்கு: சேலத்தில் ஒருவர் கைது!

5 நிமிட வாசிப்பு

கொடநாடு வழக்கு: சேலத்தில் ஒருவர் கைது!

பன்னீர் பின்னால் திமுக: சிவி சண்முகம்

4 நிமிட வாசிப்பு

பன்னீர் பின்னால் திமுக: சிவி சண்முகம்

மகாராஷ்டிரா: ஆளுநருடன் பாஜக பட்னவிஸ் சந்திப்பு- அடுத்த ஆட்சிக்கு ...

3 நிமிட வாசிப்பு

மகாராஷ்டிரா: ஆளுநருடன் பாஜக பட்னவிஸ் சந்திப்பு- அடுத்த ஆட்சிக்கு ஆயத்தம்! 

சனி 2 ஜன 2021