மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 1 ஜன 2021

அதிமுக தலைமையில்தான் கூட்டணி: முதல்வர் திட்டவட்டம்!

அதிமுக தலைமையில்தான் கூட்டணி: முதல்வர் திட்டவட்டம்!

அதிமுக தலைமையில்தான் கூட்டணி என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 28ஆம் தேதி நாமக்கல்லில் தொடங்கினார். அதைத் தொடர்ந்து திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பிரச்சாரத்தின்போது அதிமுக அரசு செய்த திட்டங்களை எடுத்துக்கூறும் முதல்வர், திமுகவையும் அதன் தலைவர் ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

இந்தச் சூழ்நிலையில் பிரச்சாரத்தை முடித்த பிறகு நேற்று மாலை செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமையும். அதை ஏற்பவர்களுடன்தான் கூட்டணி அமைக்கப்படும். ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு நிலைப்பாடு உள்ளது. தங்களுடைய கட்சியின் வளர்ச்சிக்காக, தொண்டர்களை ஊக்குவிக்க தலைவர்கள் பேசுவார்கள். ஏற்கனவே கூட்டணியில் இருந்த கட்சிகள் இப்போது கூட்டணியில் தொடர்கின்றன” என்றார்.

ஜெயலலிதா இறந்த பிறகு சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால் அனைத்து பகுதிகளுக்கும் செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் முன்கூட்டியே தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டோம் என்று விளக்கிய முதல்வரிடம், சசிகலா விடுதலையானால் அரசியல் மாற்றம் நிகழுமா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு, “நான் யூகமாக எந்த பதிலும் சொல்ல முடியாது. ஆனால், எங்களைப் பொறுத்தவரை சசிகலா வருகையால் நிச்சயம் எந்த மாற்றமும் இருக்காது” எனப் பதிலளித்தார்.

தேர்தல் அறிவிக்காத நிலையில் கூட்டணி, முதல்வர் வேட்பாளர் உட்பட எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. திமுக கூட்டணியில்கூட எந்தக் கட்சி உள்ளது என்றே தெரியவில்லை என்றவர், “என்னுடைய பெயரிலேயே எடப்பாடி என்று இருக்கிறது. அங்கு ஆறு முறை போட்டியிட்டுள்ளேன். எடப்பாடி மக்கள் என்னை மீண்டும் தேர்ந்தெடுப்பார்கள்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

3 நிமிட வாசிப்பு

ரஜினியை சசிகலா சந்தித்தது ஏன்?

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

4 நிமிட வாசிப்பு

பிப்ரவரியில் மூன்றாவது அலை உச்சத்தைத் தொடும்!

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

5 நிமிட வாசிப்பு

வெளியானது டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணை!

வெள்ளி 1 ஜன 2021