மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 1 ஜன 2021

தலைவர்கள் பதவிக்காக மீண்டும் கட்சிக்குத் திரும்புகிறார்கள்: சி.வி.சண்முகம்

தலைவர்கள் பதவிக்காக மீண்டும் கட்சிக்குத் திரும்புகிறார்கள்: சி.வி.சண்முகம்

அதிமுகவில் தலைவர்கள் பதவிக்காக வெளியே சென்று மீண்டும் கட்சிக்குள் திரும்புவதாக சி.வி.சண்முகம் விமர்சித்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நேற்று (டிசம்பர் 31) நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், “அதிமுகவின் தொண்டர்கள் எங்கும் செல்லாமல் உறுதியாக நமது கட்சியிலேயே உள்ளனர். ஆனால் அதிமுக தலைவர்கள் சிலர் பதவிக்காக வெளியே சென்றுவிட்டு மீண்டும் கட்சிக்குத் திரும்புகின்றனர்’’ என்று குறிப்பிட்டார்.

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் பன்னீர்செல்வத்தை மனதில் வைத்துதான் சி.வி.சண்முகம் இவ்வாறு பேசியதாக யூகங்களும் கிளம்பியுள்ளன. ஏனெனில் அதிமுகவில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பிறகுதான் தர்மயுத்தம் தொடங்கி தனி அணி கண்டார் ஓ.பன்னீர்செல்வம். அப்போது, அவரை கடுமையாக விமர்சித்தவர்களில் சி.வி.சண்முகமும் ஒருவர்.

அதன்பிறகு துணை முதல்வர் பதவி வழங்குவதாக உத்தரவாதம் அளித்த காரணத்தால் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்தார். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவியும் பன்னீர்செல்வத்துக்கு வழங்கப்பட்டது. இதைத்தான் மறைமுகமாக சி.வி.சண்முகம் விமர்சித்துள்ளார் என்கிறார்கள் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள்.

ஆனாலும் தொண்டர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தவே அவ்வாறு கூறினார், அதில் வேறெந்த உள்நோக்கமும் இல்லை என்கிறார்கள் சி.வி.சண்முகம் தரப்பில்.

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

வெள்ளி 1 ஜன 2021