மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 1 ஜன 2021

ஜெயக்குமாருக்கு அச்சுறுத்தல்: அட்வைஸ் செய்த எடப்பாடி

ஜெயக்குமாருக்கு அச்சுறுத்தல்: அட்வைஸ் செய்த எடப்பாடி

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவருவதால் அனைத்து கட்சியினரும் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக திமுக மற்றும் அதிமுகவினர் போட்டிப் போட்டுக் கொண்டு பிரச்சார சுற்றுப் பயணத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதிமுகவின் அமைச்சர்கள் தத்தமது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களை சந்திக்க ஆரம்பித்துவிட்டனர்.

அந்த வகையில் சென்னையைச் சேர்ந்த மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தனது தொகுதியில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு காரில் பயணிக்காமல் இருசக்கர வாகனத்தில் பயணித்து வருகிறார். குறிப்பாக கடந்த 15 நாட்களாக பாதுகாப்பு அதிகாரிகள் துணையின்றி, தொகுதியைச் சேர்ந்தவர்களின் பைக்கை நிறுத்தி, ‘அந்த தெருவில் இறக்கிவிட்டுப் போப்பா’ என தனியாகவே சென்று நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.

தினமும் ஒரு பேட்டியாவது கொடுத்துவிடும் அளவுக்கு அதிமுகவிலேயே அதிகமான செய்தியாளர் சந்திப்புக்களை நிகழ்த்தி வருபவர் ஜெயக்குமார். தனது பேட்டியில் அமமுக, திமுகவினரை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இதனால் பாதுகாப்பு அதிகாரிகள் ஜெயக்குமாரிடம், ‘ஏற்கனவே உங்களுக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. இப்போது தேர்தல் நேரம் வேறு. எனவே, தனியாக எங்கும் செல்ல வேண்டாம். நாங்களும் உடன் வருகிறோம்’ என்று கூறியுள்ளனர்.

இதேபோல அமைச்சர் ஜெயக்குமார் தொடர்ந்து பைக்குகளில் செல்லும் தகவல் உளவுத் துறையினர் மூலமாக முதல்வருக்கு சென்றது. ஜெயக்குமாரை அழைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தகவல் வந்துள்ளதால் தேர்தல் வரையும் சற்று பாதுகாப்பாக பயணியுங்கள். எங்கு சென்றாலும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் செல்லுங்கள். டூ வீலர்களில் எங்கும் பயணிக்க வேண்டாம்” என அன்பாக அட்வைஸ் செய்திருக்கிறார். அதற்கு அமைச்சர் ஜெயக்குமாரும் சரி என்று சொல்லிவிட்டு வந்துள்ளார் என்கிறார்கள் சென்னை மாவட்ட அதிமுகவினர்.

அதிமுக பொதுக்குழுவுக்குத் தடையா?

3 நிமிட வாசிப்பு

அதிமுக பொதுக்குழுவுக்குத் தடையா?

எடப்பாடி நடத்தும் எதுவுமே செல்லாது: தேர்தல் ஆணையத்திடம் பன்னீர் ...

7 நிமிட வாசிப்பு

எடப்பாடி நடத்தும் எதுவுமே செல்லாது: தேர்தல் ஆணையத்திடம் பன்னீர் புகார்!

தற்காலிக பொதுச் செயலாளர் எடப்பாடி: தலைமைக் கழகக் கூட்டத்தில் ...

4 நிமிட வாசிப்பு

தற்காலிக பொதுச் செயலாளர் எடப்பாடி: தலைமைக் கழகக் கூட்டத்தில் முடிவு!

வெள்ளி 1 ஜன 2021