மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 1 ஜன 2021

தேர்தல் அதிகாரி சாஹூவுக்கு பதவி உயர்வு வழங்கிய தமிழக அரசு!

தேர்தல் அதிகாரி சாஹூவுக்கு பதவி உயர்வு வழங்கிய தமிழக அரசு!

தமிழகத்தில் 7 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு முதன்மைச் செயலாளர் பதவி உயர் வழங்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருக்கும் சண்முகம் 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஓய்வு பெற்றார். அவருக்கு இரண்டாவது முறையாக பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு அடுத்து கூடுதல் தலைமைச் செயலாளர், முதன்மைச் செயலாளர் அந்தஸ்துகளில் பல ஐஏஎஸ் அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் 1997ஆம் ஆண்டு பேட்சைச் சேர்ந்த 7 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு செயலர் பதவியில் இருந்து முதன்மைச் செயலாளர் அந்தஸ்து உயர்வு வழங்கி தலைமைச் செயலாளர் இன்று (ஜனவரி 1) உத்தரவு பிறப்பித்துள்ளார். செய்திக் குறிப்பின்படி, வீட்டுவசதி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை செயலர் அந்தஸ்த்தில் உள்ள கார்த்திகேயன் முதன்மைச் செயலராக அதே பதவியில் தொடர்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்தத்துறை செயலர் ஸ்வர்ணா, டெல்லி தமிழ்நாடு இல்ல ஆணையர்-2 பதவி வகிக்கும் ஆசிஷ் வச்சானி, டான்ஜெட்கோ தலைவர் மற்றும் செயலர் பங்கஜ்குமார் பன்சார் ஆகியோருக்கும் முதன்மைச் செயலாளர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியாக பதவி வகிக்கும் சத்ய பிரதா சாஹு முதன்மைச் செயலராக பதவி உயர்வு பெற்று அதே பொறுப்பில் தொடருகிறார். வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை செயலர் அந்தஸ்த்தில் உள்ள பீலா ராஜேஷ், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்தத்துறை (பயிற்சி) செயலர் அந்தஸ்த்தில் உள்ள ஹர் சஹய் மீனா ஆகியோருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

வெள்ளி 1 ஜன 2021